சீனா , அமெரிக்கா இனி யாராக இருந்தாலும் அடிதான்...!!எகிறி பாய்ந்து அடிக்க தயாரானது இந்தியா

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2020, 11:51 AM IST
Highlights

போர் தளவாடங்களை இருப்பு வைப்பதால் இந்தியா போருக்கு தயாராகி விட்டது என்று அர்த்தம் இல்லை . நாட்டின் பாதுகாப்பை மனதில் கொண்டு ராணுவ தளவாடங்கள் இருப்பு வைக்க உள்ளது என தெரிவித்துள்ளது. 
 

தொடர்ந்து 40 நாட்கள் போரிடுவதற்கு ஏற்றவகையில் இந்திய ராணுவம் ஆயுதங்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளது .  எல்லையில்   சீனா , பாகிஸ்தான்  உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு எதிராக  செயல்பட்டு வரும் நிலையில் , ராணுவ பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கையில் இறங்கி உள்ளது இந்தியா, அதன் ஒரு பகுதியாக ராணுவத்தில் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் அதி ரக போர் விமானங்களை வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் இறங்க  உள்ளது . 

உலகிலேயே நான்காவது ராணுவம் என்ற அந்தஸ்து கொண்ட இந்தியா,   சுமார் 13 லட்சம் ராணுவ வீரர்களைக் கொண்டதாக உள்ளது .  திடீரென ஒரு போர் ஏற்படும் பட்சத்தில் அதை சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவத்தின்  கட்டமைப்பு வலுவானதாக  இல்லை என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது ,   இந்நிலையில் இந்த கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது இந்தியா,   2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் 40 நாட்களுக்கு மேல்  தொடர்ந்து போரிடுவதற்கான பலத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது ,  இது குறித்து  தெரிவித்துள்ள ராணுவ வட்டாரங்கள்,   போர் தளவாடங்களை இருப்பு வைப்பதால் இந்தியா போருக்கு தயாராகி விட்டது என்று அர்த்தம் இல்லை . நாட்டின் பாதுகாப்பை மனதில் கொண்டு ராணுவ தளவாடங்கள் இருப்பு வைக்க உள்ளது என தெரிவித்துள்ளது. 

அடுத்து வரும் 10 ஆண்டுகளில் சுமார் 12, 890 கோடி செலவில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் 24 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . அதேபோல உள்நாட்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆண்டுக்கு 1, 700 கோடி செலவில் பீரங்கி வாகனங்கள் ,  வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

click me!