அதிமுக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை அடித்து உதைக்க வேண்டும்... மு.க.ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை..!

By vinoth kumarFirst Published Jan 28, 2020, 11:48 AM IST
Highlights

சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி பேசிய மு.க.ஸ்டாலின்;- பெரியார் குறித்தும், மத்திய மாநில அரசுகள் உறவுகள் குறித்தும், பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.

ஊழல் ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசுக்கு நல்லாட்சி விருது வழங்கியவர்களை கூட்டி வந்து உதைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி பேசிய மு.க.ஸ்டாலின்;- பெரியார் குறித்தும், மத்திய மாநில அரசுகள் உறவுகள் குறித்தும், பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.

அதில், மணமகன், மணமகள் இருவரும் வீட்டில், மத்திய - மாநில அரசு போன்று அமைதியாக இருக்கக் கூடாது கேள்வி கேட்க வேண்டும் என தெரிவித்தார். குடியுரிமை சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதை எதிர்ப்பதாகவும், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமாரே குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வருகிறார் எனவும் குறிப்பிட்டார். 

மேலும், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறி வருகிறார். முதலில் தமிழகத்துக்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால், அதிமுக அரசை பாராட்ட தயார் என்றார். 

அதிமுக ஆட்சி கொள்ளையடிக்கும் ஆட்சி, ஊழல் வாங்கும் ஆட்சி எனவும் மு.க.ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!