டெல்லியில் தனி லாபி..! மாப்பிள்ளையை பகைத்துக் கொண்ட டி.ஆர். பாலு..! பதவி பறிப்பின் பகீர் பின்னணி..!

By Selva KathirFirst Published Jan 28, 2020, 11:01 AM IST
Highlights

ஒரு காலத்தில் தஞ்சை திமுகவின் கோட்டையாக இருந்தது. சோழ மண்டலம் சோறுடைத்தது என்பது போல அந்த மண்டலம் எப்போதும் திமுகவின் அபிமானமான பகுதியாகவும் இருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் செயலாளராக இருந்த கோசி மணி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தஞ்சையில் எம்பியாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த எஸ்எஸ் பழனிமாணிக்கம் மாவட்டச் செயலாளர் ஆனார். கலைஞர் மற்றும் கனிமொழி உடனான நெருக்கம் மூலமாக அவருக்கு இந்த பதவி கிடைத்தது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிக மிக நெருக்கமானவராக இருந்த டி.ஆர். பாலுவிடம் இருந்து தலைமை நிலையச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் தஞ்சை திமுகவின் கோட்டையாக இருந்தது. சோழ மண்டலம் சோறுடைத்தது என்பது போல அந்த மண்டலம் எப்போதும் திமுகவின் அபிமானமான பகுதியாகவும் இருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் செயலாளராக இருந்த கோசி மணி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தஞ்சையில் எம்பியாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த எஸ்எஸ் பழனிமாணிக்கம் மாவட்டச் செயலாளர் ஆனார். கலைஞர் மற்றும் கனிமொழி உடனான நெருக்கம் மூலமாக அவருக்கு இந்த பதவி கிடைத்தது.

ஆனால் ஸ்டாலினுக்கு பழனிமாணிக்கத்தை கடந்த சட்டமன்ற தேர்தல் வரை பிடிக்காது. காரணம் டி.ஆர்.பாலு. சென்னையில் ஸ்டாலினின் நிழலாக இருப்பவர்களில் ஒருவர் டி.ஆர்.பாலு. இவர் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சையில் போட்டியிட ஆர்வம் காட்டினார். காரணம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக்காரரான டி.ஆர்.பாலுவுக்கு அப்பகுதியில் கல்லூரி, சாராய ஆலை என ஏகப்பட்ட பிசினஸ் உண்டு. ஸ்டாலின் உடனான நெருக்கத்தை பயன்படுத்தி 2014 நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியின் வேட்பாளர் ஆனார் பாலு.

இதற்கு எதிராக பழனிமாணிக்கம் வெளிப்படையாகவே பேட்டி அளித்தார். கலைஞர் மூலமாக நடைபெற்ற சமாதானத்திற்கு பிறகு பழனிமாணிக்கம் அமைதியாகிவிட்டார். இதனை பயன்படுத்தி தஞ்சை மாவட்டச் செயலாளராக தனது ஆதரவாளர்களை நியமித்தார் பாலு. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்தார் பாலு. சட்டமன்ற தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றி தஞ்சை பகுதியில் திமுகவிற்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கலைஞரும் காலமானார்.

நிலைமையை புரிந்து கொண்டு மீண்டும் பழனிமாணிக்கத்திடம் தஞ்சை மாவட்டத்தை ஒப்படைத்தார் ஸ்டாலின். கடந்த தேர்தலில் போட்டியிட்டு அமோகமாக வென்றார் பழனிமாணிக்கம். இந்த அளவிற்கு டி.ஆர்.பாலுவிற்காக ஒரு மாவட்டத்தையே ரிஸ்க் எடுத்தார் ஸ்டாலின். மேலும் கலைஞர் மறைவுக்கு பிறகு துரைமுரகன் திமுக பொருளாளர் ஆன நிலையில் அவர் வகித்து வந்த தலைமை நிலையச் செயலாளர் பதவி டி.ஆர்.பாலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. நாடாளுமன்ற திமுக தலைவராக கனிமொழி ஆசைப்பட்ட நிலையில் அவரை ஓரம்கட்டி பாலுவை தலைவராக்கினார் ஸ்டாலின்.

இப்படி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக டெல்லியில் திமுகவின் முகமாக டிஆர் பாலு மாறிப்போனார். இந்த நிலையில் தான் திடீரென பாலுவிடம் இருந்து தலைமை நிலையச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. வேறு புதிய பதவி அவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் தன்னை திமுக பொதுச் செயலாளராக்கவே தலைமை நிலையச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாகவும் டிஆர் பாலு கூறி வந்தார். ஆனால் பதவி பறிக்கப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையிலும் அவருக்கு புதிய பதவிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

இது குறித்து விசாரித்த போது டெல்லியில் திமுகவிற்கு ஏற்கனவே இரண்டு லாபி உள்ளது. ஒன்று மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செய்யும் லாபி. இன்னொன்று கலைஞர் காலம் தொட்டே அவரது மகள் கனிமொழி செய்து வரும் லாபி. இதற்கிடையே டி.ஆர்.பாலுவும் தனக்காக ஒரு லாபியை உருவாக்கி டெல்லியில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களிடம் தான் திமுகவின் பிரதிநிதி  போல பேசி வந்ததாகவும் சில முடிவுகளை கட்சி தலைமையிடம் கூறாமலேயே எடுத்து வந்ததாகவும் சொல்கிறார்கள்.

அதிலும் பாஜக தலைவர்கள் சிலருடன் பாலு நெருக்கமாக தொடர்பில் இருந்ததாகவும் அரசியல் ரீதியிலாக சில முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதிகளை அவர் பாஜக தலைகளிடம் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். இது குறித்த தகவலை அறிந்து அதிர்ந்த சபரீசன், பாலு எல்லை மீறுவதை ஆதாரத்துடன் ஸ்டாலினிடம் எடுத்துக்கூறவே பதவி பறிப்பு அரங்கேறியது என்று கூறுகிறார்கள்.

click me!