ஹவாலா ஸ்டைல் பணபட்டுவாடா... பறிபோகும் நிலையில் தினகரனின் MLA பதவி!?

First Published Dec 28, 2017, 10:45 AM IST
Highlights
Independent MLA Dinakaran will be disqualified as his supporters in RK Nagar


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்களர்களுக்கு ஹவாலா முறையில் 20 ரூபாய் டோக்கன்  கொடுத்த விவகாரத்தில் மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் தினகரனின் எம்எல்ஏ பதவி பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் அதுவும் தலைநகரான சென்னையில் உள்ள ஒரு தொகுதியின் இடைதேர்தளுக்காக செலவு செய்யப்பட்ட தொகை, அரசியல் வட்டாரத்தையே நடுங்க வைத்தது.

ஏற்கனவே, பணம் அதிகமாக வாக்களர்களுக்கு வழங்கப்பட்டது தொடர்பாக, தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். சுமார் ஆறுமாதத்திற்கு பிறகு தேர்தலை நடத்தியது, வாக்குப்பதிவுக்கு பத்தே நாள் உள்ள இடப்பட்ட காலத்தில் பெரும் தொகை வாக்களர்களுக்கு வழங்கப்பட்டது. ஆளும் கட்சி, சுயேச்சை வேட்பாளர் தினகரன் போட்டிபோட்டுக்கொண்டு பணத்தை வாரி இறைதுள்ளதாக தகவல்கள் வந்தது.

இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்ததாகவும், தேர்தல் முடிந்த பிறகு, 20 ரூபாய் டோக்கன்களை திரும்ப பெற்று ரூ.10 ஆயிரம் என ஹவாலா வாக்குகளை கைப்பற்றியதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

தினகரன் அணியினர் இம்ப்ளிமென்ட் செய்த இந்த ஹவாலா ஸ்டைலுக்கு, எப்படியும் நமக்கு பணம் கிடைத்துவிடும் என்ற ஆவலில் சின்னமே தேயும் அளவிற்கு தேடி பிடித்து பட்டிடனை அமுக்கியுள்ளனர். இது தேர்தல் முடிவு நாளில் கண்கொள்ளாக பார்த்தோம்,  மெகா வெற்றி கிடைத்தது. 50 சதவீதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று ஆளும் கட்சி, எதிர்கட்சி என தூக்கி அடித்து விட்டார் தினகரன்.

தேர்தலும் முடிந்தது, ரிசல்ட்டும் வெளிவந்தது, தொடந்து அரசியல் கட்சிகள் பணம்கொடுத்தும், ஹவால முறையில் டோக்கன் கொடுத்தான் வாங்கிய வெற்றியென தொடர்ந்து சொல்லிவருவதால், டோக்கனுக்கு பதிலாக பணம் தருவதில் தாமதமாகிறது.  அடுத்த நாளே ௨௦ ரூபாயை எடுத்துக்கொண்டு பணம் யார் தருகிறார்கள்? எங்கே தருகிறார்கள் என தேட துவங்கியுள்ளனர் ஆர்.கே.நகர் வாசிகள்.

இன்னும் சொன்னமாதிரி டோக்கனுக்கு பணம் தராததால், நன்றி தெரிவிக்க கூட ஆர்.கே.நகர் போகாமல் காத்துகொண்டிருக்கிறார் தினகரன்.

இந்நிலையில், 20 ரூபாய் டோக்கன் தொடர்பாக ஆர்.கே.நகர் மக்கள் பொறுமை இழக்க தொடங்கிவிட்டனர். புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவில் வசிக்கும் கார்த்திகேயன், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் வசிக்கும் தினகரன் ஆதரவாளரான ஜான்பீட்டரிடம் டோக்கன் தொடர்பாக தகராறு செய்துள்ளார்.

ஜான் பீட்டரிடம், சென்ற கார்த்திகேயன் தங்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து, ஜான் பீட்டர் மற்றும் சரண்ராஜ், செல்வம், ரவி ஆகியோர் சேர்ந்து கார்த்திகேயனை சரமாரியாக  தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கார்த்திகேயன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

2௦ ரூபாய் டோக்கனுக்கு ரூ.10,000 தருவதாக இருந்தது, அம்பலமாகியுள்ளதால் தினகரனின் MLA பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது. மேலும் கோடிக்கணக்கில் வாரியிரைக்கபட்டுள்ள இந்த பணத்தை தினகரனின் தேர்தல் செலவு கணக்கில் இந்த பணத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தல் செலவு கணக்கு வழக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது வாக்காளர்களுக்கு கொடுத்த பண மதிப்பையும் தினகரன் தேர்தல் செலவு கணக்கில் சேர்த்தால், கொடிகளில் கொட்டி வாங்கிய தினகரனின் எம்எல்ஏ பதவி பறிபோகும்!  

click me!