கூட இருந்தே குழி பறிக்கிறார்களா கூட்டணி கட்சிகள் !  செம கடுப்பில் செயல் தலைவர் !!

First Published Dec 28, 2017, 10:39 AM IST
Highlights
Even the DMK coalition parties are in the hole


சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தோற்றது கூட பெரிய விஷயமில்லை, ஆனால் ஜெயித்த தினகரனுடன் திருநாவுக்கரசர், திருமாவளவன் போன்றோர் நட்பு பாராட்டுவதும், 2ஜி வழக்கில் இருந்து திமுக விடுவிக்கப்பட்டபோதும், அவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என இடதுசாரி கட்சிகள் கொடி பிடிப்பதும் ஸ்டாலினை அப்செட் ஆக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல்  மு.க.அழகிரி திடீரென  தனக்கு எதிராக பேசிவருவதும் ஸ்டாலினை நோக  வைத்துள்ளதாக தவகல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று வரும் ஜனவரி 4ஆம் தேதியோடு ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தது.

அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்திப்பதால் திமுக எப்படியும் ஈஸியாக வெற்றி பெற்றுவடலாம் என ஸ்டாலின் தப்புக் கணக்கு போட்டுவிட்டார். பெரும்பாலும் திமுக எதிர்கட்சியாக இருக்கும்போதுதான் ஸ்ராங்காக இருக்கும். ஏற்கனவே சட்டப் பேரவையில் அதிமுகவுக்கு கடுமையான டஃப் கொடுத்து வரும் திமுக இடைத் தேர்தலில் கண்டிப்பாக ஜெயிக்கும் என அனைவருமே நம்பினர்.

ஆனால் சொந்த கட்சிக்காரர்களே தேர்தல் பணியில் பணத்தை சுருட்டி ஆப்பு வைத்த விஷயம் தெரிந்தபோது தேர்ந்தே விட்டாராம் செயல் தலைவர். ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக தலைமை, பூத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சொல்லி தலைமை சார்பில் ரூ.5 ஆயிரம் கொடுத்து, அந்தந்தப் பொறுப்பாளர்கள் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், பல நிர்வாகிகள் தலைமை கொடுத்த பணத்தையே முழுமையாகக் கொடுக்காமல் ரூ.2 ஆயிரம் கமிஷன் எடுத்துக்கொண்டு, பூத் நிர்வாகிகளுக்கு மீதி ரூ.3 ஆயிரத்தை மட்டும் வழங்கியுள்ளார்கள்.

கோபமான உள்ளூர் கட்சி நிர்வாகிகள் விரக்தியடைந்து, தேர்தல் வேலைகளில் விலகி நின்றார்கள். இதுதான் திமுக எதிர்பாராத தோல்விக்கான காரணம் என்று உள்ளூர் நிர்வாகிகள் அறிவாலயத்துக்குப் புகார் அனுப்பி வருகிறார்கள்.

இந்த இக்கட்டான நேரத்தில் அண்ணன் மு.க.அழகிரியும் தன் பங்கிற்கு ஸ்டாலினை கலாய்த்து வருகிறார். சொந்தக்கட்சியினர் ஒரு பக்கம் குடைச்சல் கொடுத்தாலும்  அதை சரி பண்ணிவிடலாம். ஆனால் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பின் தொடர்ந்து இந்த அணியில் இயங்குமா என்ற கேள்வி தற்போது  எழுந்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி என்பது பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி என்றும்  தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய தோல்வி என்றும்  மு.க.ஸ்டாலின் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகிறார்.

ஆனால், திமுக அணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரனுக்கு வாழ்த்துகளைச் சொல்கிறார். இது திமுகவினரைக் கோபப்படுத்தியுள்ளது.

இதேபோல திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவனும் தினகரனுக்கு வாழ்த்து சொன்னதோடு, ‘ஜெயலலிதாவின் வாரிசு தினகரன்தான் என்பதை ஆர்.கே.நகர் தேர்தல் நிரூபித்துவிட்டது’ என்று தினகரனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநில செயலாளராக ஜிஆர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அன்றிலிருந்து அக்கட்சிக்கும் திமுகவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவைத் தனி மேடையில் இருந்து ஆதரிப்பதாகச் சற்றே தள்ளியிருந்த மார்க்சிஸ்ட் கட்சி 2ஜி வழக்கில் திமுக கொண்டாடிக்கொண்டிருக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் திமுகவும் மார்க்சிஸ்ட் கட்சியும் வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கூட்டணியை முறித்துக்கொள்ளும் என்றே தெரிகிறது.

கூட்டிக்கழித்துக் பார்த்து  கூட்டணி கட்சிகள்  குழி  பறிப்பதை மு.க.ஸ்டாலின் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். தேர்தலுக்காகவோ அல்லது பிரச்சனைகளின் அடிப்படையிலோ உருவாக்கப்பட்ட இந்த பெரிய கூட்டணி தற்போது தேய்ந்து வருகிறது.

click me!