பெண் செய்தியாளர்கள் குறித்து அநாகரீகம்: இந்த ஒருமுறை மன்னிச்சுடுங்க.. நீதிமன்றத்தில் கதறும் எஸ்.வி சேகர்.

Published : Apr 08, 2022, 03:21 PM IST
பெண் செய்தியாளர்கள் குறித்து அநாகரீகம்: இந்த ஒருமுறை மன்னிச்சுடுங்க.. நீதிமன்றத்தில் கதறும் எஸ்.வி சேகர்.

சுருக்கம்

பெண் செய்தியாளர் குறித்து அநாகரீகமாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக எஸ்.வி சேகர் தரப்பில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 

பெண் செய்தியாளர் குறித்து அநாகரீகமாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக எஸ்.வி சேகர் தரப்பில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்னால் இது போன்ற செயலில் ஈடுபட்டது இல்லை என்றும், இனியும் இப்படி ஈடுபட மாட்டேன் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

எதையும் வாய் துடுக்காக பேசி பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் பேர்வழி என பெயர் எடுத்தவர் எஸ்.வி சேகர் வெளிப்படையாக பேசுகிறேன், ஓப்பனாக இருக்கிறேன் என்று அவர் பேசும் பேச்சுக்கள் பல நேரங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த வரிசையில்தான் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் செய்தியாளர் குறித்து பதிவிட்ட ஒரு கருத்து இந்த அளவுக்கு அவரை உலுக்கி எடுத்து வருகிறது. வாண்டடா தலையை கொடுத்துவிட்டு தயவு செய்து விட்ருங்க என கதறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அவர். அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து கருத்து ஒன்று பதிவிட்டிருந்தார்.

 

அதைத் தொடர்ந்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த  வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திர முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி சேகர் தரப்பில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்பதாகவும், நீதிமன்றத்தில் மற்றொருமுறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டது. அமெரிக்காவில் உள்ள  நண்பர் ஒருவரின் கருத்தை தான், தான் படிக்காமல் பகிர்ந்து விட்டதாகவும் அதற்குப் பின்னர் அதை படித்து அது தவறென அறிந்த பின்னர் அதை நீக்கி விட்டதாகவும், இது தொடர்பாக பலமுறை மன்னிப்பு கேட்டதாகவும் எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் எஸ்,வி சேகர் என்ன படிக்காதவரா? அப்படிப்பட்டவர்கள் எப்படி தங்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்கள் என கூறிக் கொள்கிறார்கள் என கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி ஜெகதீஸ் சந்திர முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவுபடி காவல்துறை விசாரணையில் கேட்ட கேள்விக்கு பதில் அளித்ததாகவும் எஸ்வி சேகர தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் நிருபர்களை பேசிய விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக இப்படி நடந்து கொண்டதில்லை என்றும், இனி இப்படி ஈடுபட மாட்டேன் என்றும், இத்துடன் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என எஸ்.வி சேகர் தரப்பில் வாதிடப்பட்டது.  வேண்டுமென்றால் நீதிமன்றத்திற்கும் நேரடியாக வந்து மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

 

ஆனால் காவல்துறை முன்பு ஆஜரான எஸ் வி சேகர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனவும் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து எஸ்.வி சேகர் சமூக வலைதளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து பேசியதாக இந்த ஒரு புகார் மட்டும் தான் அளிக்கபடுள்ளதா அல்லது வேறு ஏதேனும் புகார் இருந்தால் அது தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!