வேட்டை ஆரம்பம்... பல லட்சம் கோடிகளை பதுக்கிய இந்திய அரசியல்வாதிகள்- பணமுதலைகளுக்கு பட்டை நாமம்..!

By Thiraviaraj RMFirst Published May 1, 2020, 10:38 AM IST
Highlights

வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத  கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு எதிரான பிரமாண்ட வேட்டையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. 
 

வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத  கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு எதிரான பிரமாண்ட வேட்டையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. 

வளரும் நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கருப்பு பணம் பதுக்குவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து மட்டும் 343.04 பில்லியன் டாலர் மதிப்பிலான கருப்புப் பணம் அயல் நாடுகளில் பதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்மூலம் கருப்புப் பணம் பதுக்கலில் உலகளவில் இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இப்படி வெளிநாட்டில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அந்த கருப்புப்பணத்தை மீட்டால், இங்குள்ள ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் லட்சம் ரூபாய்  அக்கவுண்டில் செலுத்தப்படும் அளவுக்கு வெளிநாட்டில் இந்தியர்களின் பணம் குவிந்து கிடக்கிறது.

 இந்தப்பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் தற்போது கொரோனா அதனை எளிமையாக்கி இருக்கிறது. அதாவது இனி   நாட்டிற்குத் தெரியாமல் வெளிநாட்டில் வங்கிகளில் போட்டுள்ள பணமெல்லாம் இந்திய அரசாங்கம் வசம் வர இருக்கின்றன. பணம் போட்டு வைத்துள்ள அந்த நாட்டு அரசாங்கம் திவாலாவதைத் தடுக்க, அந்த வங்கிகளை அரசுடமையாக்கலாம். அந்த அரசாங்கம் அந்த வங்கியிலுள்ள தொகைகளை கடனாகப்பெற்று வளர்ச்சிக்காக முதலீடு செய்யலாம். அப்போது இவர்கள் போட்ட பணமெல்லாம் உடனே கிடைக்க வாய்ப்பிருக்காது. சில வருடங்கள் கழித்து கிடைக்கும்போது நமது அரசாங்கம் தலையிட்டு அதனை வசப்படுத்த வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது.

 இதற்கு எதிரான பிரமாண்ட வேட்டையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. இதை மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா உறுதிப்படுத்தினார். வருமான வரித்துறையின் இந்த கண்காணிப்பு வளையத்துக்குள் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கொண்டுவரப்பட்டு உள்ளனர்.

அவர்கள் வெளிநாடுகளில் வங்கிகளில் போட்டுள்ள பணம், வாங்கிய சொத்துகள் ஆகியவை பற்றி வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்தந்த நாட்டு வரித்துறையுடன் இணைந்து இந்த விசாரணை நடந்து வருகிறது. மேற்கண்ட இந்தியர்கள், வெளிநாடுகளில் செய்த பண பரிமாற்ற விவரங்களை நிதி புலனாய்வு பிரிவிடம் இருந்து வருமான வரித்துறை பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பண பரிமாற்றம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இவர்களில் செல்வாக்கான, முக்கிய பிரமுகர்களும் அடங்குவர். அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களும் உள்ளனர். வெளிநாடுகளில் கருப்பு பணம், சட்டவிரோத சொத்துகள் வைத்துள்ளவர்களுக்கு எதிராக புதிய கருப்பு பண ஒழிப்பு சட்டம், கடந்த 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி, கருப்பு பணம், சட்டவிரோத சொத்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுவரை ஜெயில் தண்டனையும், 120 சதவீத வரி மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த புதிய சட்டத்தின் கீழ், மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும், தங்களது வெளிநாட்டு பண, சொத்து விவரங்களை வருமான வரி கணக்கு தாக்கலில் தெரிவிக்காதவர்கள் மற்றும் வரிஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் செயல்பட்டவர்கள் மீது மட்டுமே அந்த புதிய சட்டம் பாய்ச்சப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

click me!