வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் நடக்கவோ, நிற்கவோ முடியாது ...முன்னாள் தூதரக அதிகாரி தே யாங் ஹோ தகவல்.!!

Published : Apr 30, 2020, 11:11 PM IST
வடகொரியா அதிபர்  கிம் ஜாங் அன்  நடக்கவோ, நிற்கவோ முடியாது ...முன்னாள்  தூதரக அதிகாரி தே யாங் ஹோ தகவல்.!!

சுருக்கம்

வடகொரியா நாட்டின் தற்போதைய தலைவர் கிம் ஜாங் அன் அவரால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்று தற்போது செய்திகள் வெளிவந்திருக்கிறது.  

T.Balamurukan

வடகொரியா நாட்டின் தற்போதைய தலைவர் கிம் ஜாங் அன் அவரால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்று தற்போது செய்திகள் வெளிவந்திருக்கிறது.

வடகொரியாவின் தந்தையும், அந்த நாட்டின் தற்போதைய தலைவர் கிம் ஜாங் அன்னின் தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது.


 
வடகொரியாவின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் இந்த விழாவில் கிம் ஜாங் அன் கலந்துகொள்ளவில்லை. அவர் தலைவராக பொறுப்பேற்றதற்கு பின் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை தவிர்த்ததால் அவரது உடல் நிலை குறித்து சந்தேகங்கள் எழுந்தன. இதற்கிடையில், சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு கைநடுக்கம் ஏற்பட்டதால் அவர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.

வடகொரியாவின் ரெசார்ட் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் கிம் ஜாங் அ  ன்னின் சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டிருக்கும் சாட்டிலைட் படத்தை அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இப்படி கிம் ஜாங் அன்னின் உடல் நிலை குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அண்டை நாடான தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் கொரியாவில் வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர் மூன் சுங் இன் கூறுகையில்.., "வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உயிருடனும், நலமாகவும் இருக்கிறார். கடந்த ஏப்ரல் 13-ந்தேதி முதல் வோன்சன் நகரில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல் நிலை சார்ந்து சந்தேகத்துக்கு இடமான விஷயங்கள் ஏதும் நடக்கவில்லை" என கூறினார்.

கடந்த 11ம் தேதிக்கு பிறகு பொதுவெளியில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தென்படாத நிலையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும், அவர் இறந்து விட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளிவந்தன.இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு எழுந்த சூழலில் தென்கொரியா இந்த செய்திகளை மறுத்துள்ளது. 

இந்நிலையில், வட கொரியாவில் தூதரக அதிகாரியாக பணியாற்றி பின்னர் அந்த நாட்டை விட்டு வெளியேறிய தே யாங் ஹோ , கிம் காங் அன் உயிருடன் இருக்கிறார் என்றும், ஆனால் அவரால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவருக்கு காயம்பட்டதா? அறுவை சிகிச்சை நடந்ததா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!