ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுக்ஸ்டிக்கு கொரோனா உறுதியானது.!!

By Thiraviaraj RMFirst Published Apr 30, 2020, 11:51 PM IST
Highlights

கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தனது மற்ற அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாக்க சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள உள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.

T.Balamurukan

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா.இங்கு கொரோனா தொற்று 10 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,498 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,073 ஆக உயர்ந்துள்ளது.உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 8-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் கூறும் போது, "கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தனது மற்ற அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாக்க சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள உள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.

click me!