அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Nov 3, 2023, 7:34 AM IST

அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களான திருவண்ணாமலை, சென்னை தி.நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 30 கார்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.


திமுகவில் செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மிக நெருக்கமானவரும், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்கள், மருத்துவக்கல்லூரி, தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தீபாவளி பரிசு! 

இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உட்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் சென்னை மற்றும் திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 30 கார்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எ.வ.வேலுவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  2021ம் ஆண்டு மார்ச்சில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போதும் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  

இதையும் படிங்க;-  பிரதமரான பிறகு அரசியமைப்புச் சட்டத்தின் முதல் வரியே மோடிக்கு பிடிக்காமல் போய்விட்டது.. முதல்வர் ஸ்டாலின்..!

முன்னதாக திமுக அமைச்சர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி மற்றும்  முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும், காசகிராண்ட் கட்டுமான நிறுவனங்களில் சொந்தமான இடங்களில் வருமான வரி  சோதனை நடைபெற்று வருகிறது. 
 

click me!