செந்தில் பாலாஜி உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் 4வது நாளாக தொடரும் ஐடி சோதனை.! முக்கிய ஆவணங்கள் சிக்கியதா.?

By Ajmal Khan  |  First Published May 29, 2023, 11:35 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் 4 வது நாளாக வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 


வருமான வரித்துறை சோதனை

தமிழகத்தில் டாஸ்மாக் பாட்டில்களுக்கு உரிய வரி செலுத்தாமல் கள்ள சந்தையில் விறக்கப்படுவதாகவும், மது பான பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்ப்படுவதாகவும் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் ஒரு லட்சம் கோடி அளவிற்கு முறைகேடு நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்த மத்திய அரசு, அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் வீடுகள், அலுவலகம் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய சோதனையானது. தொடர்ந்து நீடித்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

அமைச்சர் மனோ தங்கராஜை கைது செய்து சிறையில் அடைங்க..! பாஜக திடீர் போர்கொடி... என்ன காரணம் தெரியுமா?

4வது நாளாக தொடரும் சோதனை

சென்னை, கோவை, கரூர், ஈரோடு என பல பகுதிகளிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் செந்தில் கார்த்திகேயன் இல்லத்திலும், அலுவலகத்தில் தொடர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். கோவை பந்தயசாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சோதனையானது தொடர்கிறது. அரவிந்த் மற்றும் அவருடைய மனைவி காயத்திரி என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்திலும்  சோதனையான நடைபெற்று வருகிறது. மறுவாழ்வு மையம் மற்றும் கோழிப்பன்னை தொடர்பான தொழில் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.  கரூர் காந்திகிராமத்தில், பிரேம் குமார் என்பவர் வீட்டிலும், ஈரோடு திண்டல் சக்திநகரில் டாஸ்மாக் சரக்கு வாகன ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் வீட்டில் சோதனையானது தொடர்கிறது. 

முக்கிய ஆவணங்கள் சிக்கியதா.?

அதே நேரத்தில் பொள்ளாச்சி அருகே பனப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்த்தின் எம்.சாண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதே போல ஒரு சில இடங்களில் வருமான வரித்துறையினர் தங்களது சோதனையை நிறைவு செய்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு.! ஜப்பான் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

click me!