முன்னாள் எம்.பியும், பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜ்(28). அண்ணா நகரில் சவுந்தர்யா காலனியில் வசித்து வருகிறார்.
சர்சைகளுக்கு பெயர் போன முன்னாள் எம்.பி., பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பில் சசிகலா புஷ்பா மேயராக 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இருந்து வந்தார். இதனையடுத்து, மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர், மாநிலங்களையில் ஜெயலலிதா என்னை அடித்துவிட்டார் என்று சசிகலா புஷ்பா கூறிய சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் கட்சியில் இருந்த அதிரடியாக நீக்கப்பட்டார்.
undefined
அடுத்த சில நாட்களிலேயே பாஜகவில் இணைந்து மாநிலத்துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினத்தன்று பாஜகவின் நிர்வாகி பொன் பாலகணபதி என்பவர் சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுதாடர்பாக வீடியோவாக வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. எனினும் அவ்வப்போது சசிகலா புஷ்பா தொடர்பான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் எம்.பியும், பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜ்(28). அண்ணா நகரில் சவுந்தர்யா காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விருகம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அவரை சோதனையிட்ட போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.
பின்னர் மது போதையில் இருந்ததை அடுத்து அவரை காலையில் விருகம்பாக்கம் காவல் நிலையம் வருமாறு கூறினார். அதற்கு ஆத்திரமடைந்த பிரதீப் ராஜ் அந்த பெண் போலீசிடம் வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.