புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது பிரதமர் மோடி தரையில் படுத்து இருப்பது போன்ற படத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாலியல் புகார்- மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீதான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயற்ச்சித்தனர். அப்போது விளையாட்டு வீர்ர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள்.
திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என கேள்வி எழுப்பி இருந்தார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் ரீ டுவிட் செய்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், புதிய பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் என்று கூறும் பிரதமர் மோடி,
மூச்சு இருக்கா? மானம் ??
ரோஷம் ??? pic.twitter.com/Zvr2TVpepf
மோடியின் படத்தை பதிவிட்ட மனோ தங்கராஜ்
பாஜக எம்.பியின் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு இந்தியாவின் மல்யுத்த மகள்களின் போராட்டத்தை மோடி மீண்டும் பொய் சொல்லவில்லையா? செங்கோல் மற்றும் கட்டிடங்களை விட செயல்கள் சத்தமாக பேசுவதாக பதிவிட்டுள்ளார்.மற்றொரு பதிவில் பிரதமர் மோடி தரையில் படுத்து வணங்கும் படத்தை பதிவிட்டு, மூச்சு இருக்கா? மானம் ??ரோஷம் ??? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த படத்தால் அதிருப்தி அடைந்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
அமைச்சர் பிரதமர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவாக பதிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அந்த நபரை அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதோடு, கைது செய்து தகுந்த தண்டனை பெற்று தர வேண்டியது தமிழக முதலமைச்சர் அவர்களின் கடமை மற்றும் பொறுப்பு.
— Narayanan Thirupathy (@narayanantbjp)
கைது செய்து, சிறையில் அடையுங்கள்
அமைச்சர் மனோதங்கராஜ், பிரதமர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவாக பதிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அந்த நபரை அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதோடு, கைது செய்து தகுந்த தண்டனை பெற்று தர வேண்டியது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடமை மற்றும் பொறுப்பு என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்