ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிடிவி...! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை...!

 
Published : Nov 27, 2017, 06:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிடிவி...! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை...!

சுருக்கம்

In Tiruchi a meeting of District Secretaries headed by TTV is taking place.

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமயிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது, திருச்சியில், டிடிவி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற டிடிவி தினகரனுக்கும் எடப்பாடிக்கும் ஏகாப்பொருத்தம்தான். 

இதனால் டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சுடன் கைகோர்த்தார் எடப்பாடி. இதனால் எடப்பாடி டீமை விட்டு சில எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் வெளியேறினர். 

ஆனால் எடப்பாடி அணியே வெற்றி பெற்று இரட்டை இலையை கைப்பற்றியுள்ளது. இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் டிடிவி தினகரன் களமிறங்க உள்ளார். எடப்பாடி தரப்பில் இன்னும் யார் என்று முடிவாகவில்லை. 

இந்நிலையில், பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனும் அமைச்சர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.பிக்களான நவநீத கிருஷ்ணன், விஜிலா, கோகுல கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  

இதனால் மீண்டும் அணிதாவலா என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் எழுந்து அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.  

இதைதொடர்ந்து டிடிவி தினகரன் தலைமையில் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் தங்கதமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளார்கள் மனேகரன், சீனிவாசன், ராஜசேகர், மற்றும் மாவட்ட செயலாளார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!