கடந்த 10 வருஷத்துல மொத்தம் போச்சு... 1 லட்சம் கோடி அவுட்.. அதிமுகவை டார் டாராக கிழித்த பிடிஆர்.

By Ezhilarasan BabuFirst Published Aug 9, 2021, 1:45 PM IST
Highlights

வரி செலுத்த வேண்டியவர்களிடம் அதிமுக அரசு வரியை வசூல் செய்யாமல் இருந்து வந்தது என்றும், இதன் மூலம் வணிகவரி முற்றிலும் சரிந்துவிட்டது என்றும், அதேபோல் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நீதி 30 சதவீதம் வந்து சேரவில்லை என்றும் அவர் கூறினார். 

வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது என்றும். அதிமுக ஆட்சியின் தவறாக பொருளாதார குளறுபடிகளே இதற்கு காரணம் என்றும் மாநில நிதி அமைச்சர் பி.டி தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதேபோல் பெற்ற கடனில் 50 சதவீதம் மட்டுமே முதலீடுசெய்யப்பட்டுள்ளது என்பதை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், செய்த தவறை அவரே ஒப்புக் கொண்டுள்ளதை தான் பாராட்டுவதாகவும் ஆவர் கூறினார்.  

தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக ஏன் நிறைவேற்றவில்லை என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டுவந்தநிலையில், தமிழகத்தின் நிதி நிலைமை குறித்தும், அதிமுக ஆட்சி காலத்தில் அது எப்படி தவறான கையாளப்பட்டது என்பது குறித்தும் மாநில நிதி அமைச்சர் பி.டி தியாகராஜன் முழு வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார்.அதில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை அவர் அடுக்கடுக்காக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

வரி செலுத்த வேண்டியவர்களிடம் அதிமுக அரசு வரியை வசூல் செய்யாமல் இருந்து வந்தது என்றும், இதன் மூலம் வணிகவரி முற்றிலும் சரிந்துவிட்டது என்றும், அதேபோல் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நீதி 30 சதவீதம் வந்து சேரவில்லை என்றும் அவர் கூறினார். ஜீரோ வரி என்பதெல்லாம் பணக்காரர்களுக்கு பயன் தருமே தவிர ஏழைகளுக்கு எதிராகவே இருக்கிறது என்றார். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி மாற்றப்படாமல் இருக்கிறது என்றும், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பீடுகையில், தமிழகத்தில் அது மிகக் குறைவு என்றும் அவர் கூறினார்.

போக்குவரத்து துறையில், மின்சாரத்துறைக்கு அதிக கடன் வாங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடி என்றும், அதிமுகவின் கடைசி ஐந்து ஆண்டுகளில் அன்றாட செலவுக்கே கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது என்றும், அவர் கூறினார். அதேபோல் உள்ளாட்சித் தேர்தலை சரியான நேரத்தில் நடத்தாததால், தமிழக அரசுக்கு 2577 கோடி இழப்பு ஏற்பட்டது என்றார். அரசு பேருந்துகள் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் ரூபாய் 59.15 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்றும் தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 2.36 இழப்பு ஏற்படுகிறது என்றும்  மின்சாரத்துறையில் மட்டும் 1.34 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என அவர் அதிமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அதிமுக ஆட்சிகாலத்தில் செய்த பல்வேறு பொருளாதார குளறுபடிகள் காரணமாக தமிழ்நாடு அரசு நாளொன்றுக்கு  87.31 கோடி வட்டி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும், ஒரு வேலையும் உலக பொருளாதார நெருக்கடி வந்தால் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட தவறான செலவு மட்டும் ஒரு லட்சம் கோடியை தாண்டுகிறது என்றார். 
 

click me!