ஒரு அரசு பேருந்து 1 கிலோமீட்டர் ஓடினால் ரூ.60 நஷ்டம்... வெள்ளை அறிக்கையில் பகீர் தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Aug 9, 2021, 1:07 PM IST
Highlights

அ.தி.மு.க அரசின் முறையற்ற நிர்வாகத்தால், அரசு பேருந்து 1 கிலோமீட்டர் ஓடினால் அரசுக்கு 59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது

அரசு பேருந்து 1 கிலோமீட்டர் ஓடினால் அரசுக்கு 59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது என வெள்ளை அறிக்கையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘’மின்சார வாரியத்தின் கடன் ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது . உலக பொருளாதார நெருக்கடி வந்தால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அதிகம் பாதிக்கும். இதுதான் தற்போதய நிலை. 2021-22 ல் ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய GST வரி பாக்கி ரூ 20, 033 கோடி. வரி விதிப்பு அதிகரிக்காமல், மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரித்தது அதிமுக அரசு. யாரிடம் இருந்து எடுக்க வேண்டுமோ அவரிடம் எடுத்து, யாருக்கு கொடுக்க வேண்டுமொ அவர்களுக்கு கொடுக்க வேண்டும். 

பணமதிப்பிழப்பு, முறையற்ற ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவையே பொருளாதார சுணக்கத்திற்கு காரணம்.  சட்டசபையின் ஒப்புதல் இல்லாமல் ரூ1 லட்சம் கோடி வீண் செலவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை குறிப்பிட்ட காலத்தில் நடத்தாததால் தமிழ்நாட்டுக்கு ரூ.2,577 கோடி நஷ்டம். வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலையில் 31 ரூபாய் 50 காசுகள் ஒன்றிய அரசுக்குதான் வரியாக செல்கிறது. 

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படாமலேயே உள்ளது. பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது. அ.தி.மு.க அரசின் முறையற்ற நிர்வாகத்தால், அரசு பேருந்து 1 கிலோமீட்டர் ஓடினால் அரசுக்கு 59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது’’ என அவர் தெரிவித்தார். 

click me!