விஜயகாந்த் கட்சிக்கா இப்படி ஒரு நிலைமை.! 1 % வாக்குகளை கூட பெறாத தேமுதிக.!10 ஆண்டில் நடைபெற்ற தலைகீழான மாற்றம்

By Ajmal Khan  |  First Published Mar 3, 2023, 9:39 AM IST

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வெற்றி பெற இலக்குகளை அடைவதற்கு போராடாமால் சுயேட்சை வேட்பாளரை விட அதிக வாக்குகளை பெறுவதற்காகவே போராடியது தேமுதிக தொண்டர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு தேர்தல்- தேமுதிக நிலை.?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக தென்னரசு. தேமுதிக சார்பாக ஆன்ந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். ஆனால் இந்த தேர்தலில் முதல் சுற்றில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் ஆளுங்கட்சியின் பலத்தால் வேகமாக முன்னேறினார். ஒரு கட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தேமுதிக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி முன்னேறி கொண்டிருந்தார்.  முதல் சுற்று முடிவின் போது  சுயேச்சை வேட்பாளர் முத்துபாவா என்பவர் 178 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

Latest Videos

ஆணவம் பிடித்த இபிஎஸ் என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் மட்டுமே அதிமுக வளரும்! பண்ருட்டி ராமச்சந்திரன் விளாசல்.!

சுயேட்சையோடு போட்டியிட்ட தேமுதிக

அடுத்த, அடுத்த சுற்றுக்கள் செல்லும் போது சுயேட்சை வேட்பாளரை விட ஒரு சில வாக்குகள் அதிகம் பெற்று தேமுதிக வேட்பாளர் முன்னிலை பெற்றார். கடைசி சுற்றின் போது ஈவிகேஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10ஆயிரத்து 156 ஓட்டுகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43ஆயிரத்து 819 வாக்குகளை பெற்றிருந்தார். நாம் தமிழர் வேட்பாளர் 10ஆயிரத்து 827 ஓட்டுகளை பெற்றார். ஆனால் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1432 வாக்குகளை மட்டுமே பெற்று 0.84% வாக்குகளை பெற்று பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தார். விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்தவரை கட்சியின் வளர்ச்சி வேகமாக இருந்தது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை தேமுதிக கைப்பற்றியிருந்தது. அந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளி தமிழக எதிர்கட்சியாக விஜயகாந்த் அமர்ந்தார். ஆனால் 12 ஆண்டுகளில் எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. 

தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி

2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியோடு தேமுதிக சேர்ந்து பயணித்தது. அப்போது போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியே கிடைத்தது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது அந்த தேர்தலிலும் பெருவாரியான வாக்குகளை பெறமுடியாத நிலை உருவானது. 2021 சட்டமன்ற தேர்தலிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் வாக்கு சதவிகிதம் அதாள பாதாளத்திற்கு சென்றது. இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு சதவிகித வாக்குகள் கூட பெறமுடியாமல் சுயேட்சை வேட்பாளரோடு போட்டி போட்டுக்கொண்டது தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்

இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் கை சின்னத்தில் லைட் எரிந்தது..! தேர்தல் தோல்விக்கு காரணத்தை பட்டியலிட்ட இபிஎஸ்
 

click me!