மதுரை மாநாட்டிற்கு செலவு செய்த தொகை என்ன.? வங்கியில் அதிமுகவின் பணம் இருப்பு எவ்வளவு.? பொதுக்குழுவில் தகவல்

By Ajmal Khan  |  First Published Dec 26, 2023, 12:54 PM IST

 மதுரை மாநாட்டுக்கு செலவு செய்தது 2 கோடியே 24 லட்சம் எனவும், மாநாட்டில் பெறப்பட்ட நிதி 2 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் எனவும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். 


அதிமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் , அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் ஹுசேன் தலைமையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதையடுத்து நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த கூட்டத்தில்  2800 பொதுக்குழு உறுப்பினர்களும் 300 செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.  கூட்டம் தொடங்கியதும் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முக்கிய தீர்மானமாக நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற களப்பணி ஆற்றிட சூளுரை எடுக்கப்பட்டது. 

Latest Videos

வங்கியில் பணம் இருப்பு எவ்வளவு.?

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் கட்சியை வழிநடத்தி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை மாநாடு வெற்றி பெற்றதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நிதி கையிருப்பு தொடர்பான் தகவலை வெளியிட்டார். அதில்,  வங்கியில் அதிமுகவின் நிலையவைப்பு தொகையாக 164.70 கோடியும், வளர்ச்சி நிதியாக 77.10 கோடியும் என மொத்தம் 261.80 கோடி வைப்பு நிதி உள்ளது என தெரிவித்தார். 

 மதுரை மாநாட்டிற்கு செலவு என்ன.?

அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை மூலம் 20 கோடி பெறப்பட்டுள்ளதாகவும், மதுரை மாநாட்டுக்கு செலவு செய்தது 2 கோடியே 24 லட்சம் எனவும், மாநாட்டில் பெறப்பட்ட நிதி 2 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் எனவும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி.! பொதுக்குழுவில் அதிமுக உறுதி-முக்கிய தீர்மானங்கள் என்ன?

click me!