சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தின் நேரலையை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதோடு, நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சென்னைக்கு படையெடுத்து வந்துள்ளனர். அவர்களுக்காக வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் விதவிதமான சைவ உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு நிர்வாகிகளுக்கு பரிமாறப்படுகின்றன.
undefined
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் இதில் அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் பிரத்யேக நேரலையை கீழே காணலாம்...
இதையும் படியுங்கள்... அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஒன்லி வெஜ்... உணவுப் பட்டியல் இதுதான்!