ரூபாய் நோட்டில் லட்சுமி தேவி படம் இருந்தால் ரூபாய் மதிப்பில் உயரும் என பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தலைவர்களில் முக்கியமானவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார். கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேசம் மாநிலம் கந்தவா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
undefined
அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், இந்தோனேஷியாவில் அந்நாட்டு ரூபாய் நோட்டில் பிள்ளையார் படம் அச்சிடப்பட்டுள்ளது குறித்தும், அதுபோல் இந்திய ரூபாய் நோட்டில் கடவுள் படம் பிரிண்ட் செய்யப்படுமா என்று சுப்பிரமணியன் சுவாமியிடம் கருத்து கேட்டார்.
அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது: இந்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் பதில் சொல்ல முடியும். ஆனால் அதற்கு எனது ஆதரவு உண்டு. பிள்ளையார் தடைகளை நீக்குவார். பிள்ளையாரை காட்டிலும் பெண் தெய்வமான லட்சுமி தேவி படத்தை பிரிண்ட் செய்தால் ரூபாய் மதிப்பில் முன்னேற்றம் ஏற்படும் என நான் சொல்வேன். இதைப் பற்றி யாரும் மோசமாக நினைக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.