சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு? திமுக திடீர் முடிவு! ஸ்டாலின் புதுக் கணக்கு!

By Ezhilarasan BabuFirst Published Jan 16, 2020, 5:49 PM IST
Highlights

ஆனால் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை திமுக வெற்றிக்கு காங்கிரஸ் வாக்கு வங்கிதான் முக்கிய காரணம் என்று ஒரு சிலர் ஸ்டாலினிடம் கூறி வருகிறார்கள்.

காங்கிரசை கூட்டணியில் இருந்து கழட்டி விட வேண்டும் என்கிற முடிவுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே திமுக வந்துவிட்டதாகவும் அழகிரியின் அறிக்கை மூலமாக அந்த முடிவு செயல்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.  நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களை வென்றாலும் கூட இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் திமுக படு தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கோட்டை என்று கூறப்படும் நாங்குநேரியிலும் திமுக கூட்டணி தோல்வி அடைந்தது. மேலும் வேலூரில் கூட வெறும் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுகவேட்பாளரால் எம்பி ஆக முடிந்தது.  கடந்த முறை காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 

மேலும் கூட்டணி என்று வந்துவிட்டால் அதிக இடங்களை கேட்டு காங்கிரஸ் முரண்டு பிடிக்கிறது. எனவே அந்த கட்சிக்கு அவர்களுக்கு உரியதை காட்டிலும் அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் வேறு கட்சிகளுக்கு குறைவான இடங்களையே கூட்டணியில் ஒதுக்க வேண்டியுள்ளது. மேலும் தேர்தல் பணிகளிலும் காங்கிரஸ் திமுகவிற்கு ஒத்துழைப்பதில்லை. காங்கிரஸ் கோஷ்டி பூசலால் பிரச்சாரத்தில் தடங்கள் ஏற்படுகிறது. 

அதோடு தமிழகத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்க கூட்டணயில் புதிய கட்சிகளை சேர்கக் வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியுடன் உள்ளதாக கூறுகிறார்கள். எனவே தான் காங்கிரசை அழகிரியை சாக்காக வைத்து கழட்டிவிட முயற்சிகள் நடைபெறுவதாக கூறுகிறார்கள். இதனைத்தான் சோனியாவை சந்தித்த போது அழகிரி கூறியதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.  ஆனால் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை திமுக வெற்றிக்கு காங்கிரஸ் வாக்கு வங்கிதான் முக்கிய காரணம் என்று ஒரு சிலர் ஸ்டாலினிடம் கூறி வருகிறார்கள்.

அவர்களின் சுமார் 10 சதவீத வாக்குகள் நமக்கு சிந்தாமல் சிதறாமல் கிடைத்ததாகவும் லாபி செய்கிறார்கள். ஆனால் இதனை எல்லாம் கேட்கும் மனநிலையில் ஸ்டாலின் இல்லை என்று கூறுகிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் போது புதிய கூட்டணி, புதிய வியூகம் என்பதில் ஸ்டாலின் பிடிவாதம் காட்டுவதாக சொல்கிறார்கள். தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் ஸ்டாலின் பிளானில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அவற்றை எல்லாம் விட மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்தால் திமுக கூட்டணிக்கு ஒரு புதிய முகம் கிடைக்கும்என்றும் ஸ்டாலின் கருதுகிறார். இதனால் காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளை ஸ்டாலின் கழட்டிவிட பிரகாசமாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
 

click me!