கடலூர் மாநகராட்சியில் 10 மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டு பகுதியில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக்கூறி ராஜினாமா செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாநகராட்சி 45 வார்டுகளை உள்ளடக்கியது. இதில் மேயர் தேர்தலின் பொழுது திமுகவில் 2 மேயர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆதரவாளர்களாக ஒரு தரப்பு மாமன்ற உறுப்பினர்களும், மேயர் சுந்தரி ராஜா உள்ளிட்டோர், அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக ஒரு தரப்பும் என இருப்பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு மாமன்ற கூட்டம் நடைபெற்று வரும் பொழுதும் தங்கள் பகுதிக்கு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ஐயப்பன் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்து வெளிநடப்பு, கோஷங்கள் உள்ளிட்டவைகளை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் பகுதிகளுக்கு இதுவரை எந்த ஒரு மக்கள் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை எனக் கூறி ஐயப்பன் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு மாநகராட்சி ஆணையர் காந்திராஜை சந்தித்து மனு அளித்தனர்.
என்னப்பா ஏதோ 10 கிலோவ இழுத்துட்டு போற மாதிரி போற? 900 கிலோ காரை இழுத்து 7 வயது சிறுவன் சாதனை
அந்த மனுவில் வருகின்ற 31ம் தேதி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாகவும், மாநகராட்சி நடவடிக்கை தொடர்பாக ஆணையர், மாநகராட்சி மேயர், துறை அமைச்சர், கட்சி மேலிடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புகார் தெரிவித்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா
இந்த போராட்டத்திலும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை எனில் தங்களது அடையாள அட்டைகளை ஒப்படைத்து மாமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மாமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர்.