மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் - ஓ. பன்னீர்செல்வம் ஆவேச பேச்சு

By Velmurugan s  |  First Published Jan 29, 2024, 4:05 PM IST

மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என அக்கட்சியின் முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் பேச்சு.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை  கூட்டம்  நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட மீட்பு குழு செயலாளர் சிவ. நாராயணசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், வழக்கறிஞர் புகழேந்தி, எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கிய போது, பொதுச் செயலாளர் பதவியை தொண்டர்கள் தான் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சரத்தை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என கூறியிருந்தார். ஆனால் பழனிச்சாமி இதனை மாற்றி அமைத்துள்ளார். அதன்படி பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறு பரிந்துரை செய்ய வேண்டும் எனில் சாதாரண தொண்டன் போட்டியிட முடியுமா என்பதை தொண்டர்கள் யோசிக்க வேண்டும்.

Latest Videos

என்னப்பா ஏதோ 10 கிலோவ இழுத்துட்டு போற மாதிரி போற? 900 கிலோ காரை இழுத்து 7 வயது சிறுவன் சாதனை

தனக்கு பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் செய்தவர் பழனிச்சாமி, தற்போது தொண்டர்களுக்கும் துரோகம் செய்ய உள்ளார். பழனிச்சாமி, தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. அந்த வகையில் வருகின்ற மக்களவைத் தேர்தலிலும் பழனிச்சாமி தலைமையிலான அதிமுக படுதோல்வி அடையும். எனவே, தொண்டர்கள், அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க ஓரணியில் திரள வேண்டும் என்றார்.

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சவர்ணேஸ் ஆலயம்; 10 லட்சம் ருத்ராட்சத்தால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு

இந்த நிலையில்  இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது பேச்சை முடித்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்குவதற்கு முன்பாகவே மேடையில் அலங்கரிக்கப்பட்ட பூக்களை ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்த பெண் தொண்டர்கள் போட்டிப் போட்டு எடுத்துச் சென்றனர்.

click me!