Admk vs Bjp எப்ப கேட்டாலும், தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை-ஜெயக்குமார் அதிரடி

By Ajmal Khan  |  First Published Jan 29, 2024, 11:29 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.


தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் அதிமுக

நாடாளுன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலானது மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தேரதல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், தமிழத்தில் அதிமுக சார்பாக நாடாளுமன்ற தேர்தலுக்காக 4 குழுவை அறிவித்தது.

Tap to resize

Latest Videos

அதில் தேர்தல் பிரச்சார குழு, தொகுதி பங்கிட்டு குழு ஆகிய குழுக்கள் இணைந்து இன்று ஆலோசனை நடத்தியது. ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரக் குழுவும் தொகுதி பங்கிட்டு குழுவும் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை

இந்த ஆலோசனை குழு கூட்டத்தில்  ஒவ்வொரு அதிமுக ஆட்சிக்காலத்தின் பொழுதும் மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்களை மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு சேர்ப்பது, தேர்தல் பிரச்சாரங்களை திட்டமிடுவது, தெருமுனை கூட்டங்களை நடத்துவது என்பது குறித்தெல்லாம் தேர்தல் பிரச்சார குழுவும் தொகுதி பங்கிட்டு குழுவினருடன் கலந்து ஆலோசித்தனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு அதிமுங தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எப்ப கேட்டாலும், எந்த நேரத்தில் கேட்டாலும், தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லையென உறுதிபட கூறினார்.  பாஜக என்ற பெட்டியை ரயிலில் இருந்து கழட்டி விட்டது விட்டது தான் என தெரிவித்தார். மேலும் நடக்காத விஷயத்தை சொல்லி திசை திருப்ப பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சிக்கிறார், இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்றி நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது எனவும் கூறினார். அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளிவரும். இந்தியா கூட்டணி நெல்லிகாய் மூட்டை சிதறுவதுபோல் திமுக கூட்டணியும் சிதறும் என ஜெயக்குமார் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே அணியில் 11 பேரும் தமிழக வீரர்கள்- சீமான் அதிரடி

click me!