நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே அணியில் 11 பேரும் தமிழக வீரர்கள்- சீமான் அதிரடி

By Ajmal Khan  |  First Published Jan 29, 2024, 11:03 AM IST

 எடப்பாடி பழனிசாமிக்கு தனி செல்வாக்கு உண்டா.? எம்ஜிஆர் கட்சி தொடங்கினார்.அதனை ஜெயலலிதா வழி நடத்தினார். தொடர்ந்து சசிகலா கொண்டு சென்றார். எடப்பாடியிடம் கொடுத்தார். அதனை எடப்பாடி வைத்துக்கொண்டார் என சீமான் தெரிவித்தார். 


கொள்கை என்பதே கொள்ளை தான்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி,காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துக்குமாரின் 15வது ஆண்டு வீரவணக்கம் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தை கண்டு மற்ற கட்சிகள் கலக்கம் கொள்கின்றனர். திமுகவின் கொள்கை என்பது கொள்ளை தான், கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க பதவியிலேயே இரு இது தான் கொள்கை,

Tap to resize

Latest Videos

 

திமுக மாநாட்டில் காவாலா பாட்டு போட்டு கூட்டத்தை கூட்டுறாங்க, ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் ஓட்டு வாங்கி காட்ட முடியுமா.? எங்களைப்போல் பணம் கொடுக்காமல் கூட்டம் கூட்ட முடியுமா?, எந்த வித விளம்பரம் இல்லை, தொலைக்காட்சியில விளம்பரம் இல்லை. சுவரொட்டி தான் இவ்வளவு கூட்டத்திற்கு காரணம் என சீமான் தெரிவித்தார்.

ஸ்டாலின் கட்சியில் அவரது குடும்பமே சேராது

தொடர்ந்து பேசிய அவர்,  திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி என்றும் விமர்சித்தார். கருணாநதி மகன் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் உதயநிதி இப்படித்தான் உள்ளது. ஸ்டாலின் தனியாக கட்சி தொடங்கினால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே சேர மாட்டார்கள். இதே போல எடப்பாடிக்கு தனி செல்வாக்கு உண்டா.? எம்ஜிஆர் கட்சி தொடங்கினார்.அதனை ஜெயலலிதா வழி நடத்தினார். தொடர்ந்து சசிகலா கொண்டு சென்றார். எடப்பாடியிடம் கொடுத்தார். அதனை எடப்பாடி வைத்துக்கொண்டார். அதிமுக, திமுக தலைவர்கள் தமிழர்கள் கிடையாது என்றும், நாம் தமிழர் கட்சியை தான் மக்கள் தமிழர்களாக பார்க்கின்றனர். நாம் தமிழர் செய்வது தான் புரட்சி என்றும், திமுக, அதிமுக கட்சிகள் 2026க்கு பிறகு ஒரு குச்சியாக கூட இருக்காது என்றார். 

சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள்

தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடிவிட்டு பனம் பால், தென்னம்பால் வழங்குவேன், அது மது இல்லை, உணவின் ஒரு பகுதி என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சிஎஸ்கே என்ற ஒரு அணி உள்ளது. அதில் ஒருவர் கூட தமிழர் இல்லை, நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் 11 பேரும் தமிழக வீர்ர்களாக இருப்பார்கள்என சீமான் கூறினார். 

இதையும் படியுங்கள்

இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும் இயக்கப்படும்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

 


 

click me!