Breaking:ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது... மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

By Thiraviaraj RMFirst Published May 15, 2021, 12:19 PM IST
Highlights

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்றால் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினாலும்  குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்  என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்றால் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினாலும்  குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்  என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு கொடிக்கப்படும் ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடுகள் எழுஅந்து வருகின்றனர். அந்த மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் சிலர் அந்த மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். அதே போல் ஆக்சிஜன் சிலிண்டர்களும் பதுக்கப்படுகின்றன. 

இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்.ஸ்டாலின், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டாஸ் சட்டம் பாயும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுயுள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் ரெம்டெசிவிர், ஆக்சிஜனை அதிக விலைக்கு விற்பது மிக கடுமையான குற்றமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

 
 

click me!