கொரோனாவை பரப்பி விட்ட சீனா 100 வது இடத்தில்... நேற்று வெறும் 14 பேருக்கு மட்டுமே தொற்று..!

Published : May 15, 2021, 11:50 AM IST
கொரோனாவை பரப்பி விட்ட சீனா 100 வது இடத்தில்... நேற்று வெறும் 14 பேருக்கு மட்டுமே தொற்று..!

சுருக்கம்

உலக நாடுகள் கொரோனாவின் உருமாறிய தொற்றால் அலறிக் கொண்டிருக்க சீனாவில் மட்டும் இந்த அளவிற்கு குறைந்தது எப்படி

கொரோனா இரண்டாம் மற்றும் மூன்றாம் அலையினால் உலக நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. ஆனால், சீனாவில் கடந்த சில மாதங்களாக 20 க்கும் குறைவாகவே கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டு வருகிறது. நேற்று அங்கு கொரோனா தொற்று வெறும் 14 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு இறப்பு 4500 மட்டுமே.

ஆனால், சீனாவில் 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவுக்கு14 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதுவரை கொரோனா வைரஸ் சீனாவில் இருந்தே பரவியதாக கூறப்படுகிறது. 

கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்துதான் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் வவ்வாலிடம் இருந்து மனிதனுக்கு பரவியதாக சீனா கூறியது. அதே சமயம் சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் நேரில் ஆய்வு நடத்தியது. அதில், கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து கசிந்ததற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறிய உலக சுகாதார நிறுவனம், விலங்குகளிடமிருந்து  பரவியிருக்கலாம் என பொத்தாம் பொதுவாக அறிக்கை தந்தது.

உலக நாடுகள் கொரோனாவின் உருமாறிய தொற்றால் அலறிக் கொண்டிருக்க சீனாவில் மட்டும் இந்த அளவிற்கு குறைந்தது எப்படி என பல நாடுகள் ஆச்சர்யப்பட்டாலும், சில நாடுகள் சந்தேகம் கிளப்பி வருகின்றன.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!