வெங்கையா மறுத்தாலும் அதிமுக பாஜாகவின் பினாமி அரசுதான் - முத்தரசன் சாடல்...

 
Published : Apr 23, 2017, 07:34 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
வெங்கையா மறுத்தாலும் அதிமுக பாஜாகவின் பினாமி அரசுதான் - முத்தரசன் சாடல்...

சுருக்கம்

if vengaiah naidu refuse admk proxy government of the country by muththarasan

மத்திய அமைச்சர் வெங்கையா  நாயுடு மறுத்தாலும் அதிமுக பாஜகவின் பினாமி அரசாகத்தான் செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் நடைபெற்று வரும் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. அதிமுகவின் செயல்பாடற்ற தன்மைக்கு பா.ஜ.கவே காரணம் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமி ஆட்சி நடைபெறுவதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தமிழகத்தில் இப்போது பா.ஜனதா பினாமி ஆட்சி நடப்பதாக கூறினால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது தமிழகத்தில் தி.மு.க பினாமி ஆட்சி நடத்தியதா எனவும், தற்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் சூழ்நிலைக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை மயிலை மாங்கொல்லையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிட்ஸ் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

மத்திய அமைச்சர் வெங்கையா  நாயுடு மறுத்தாலும் அதிமுக பாஜகவின் பினாமி அரசாகத்தான் செயல்படுகிறது.

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. அதற்கு தமிழக அரசு துணை போகிறது.

திமுக ஆட்சியில் விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை போல் இப்போது செய்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.  

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!