
சேத்துப்பட்டு ஏரியில் 6 கோடி ரூபாயில் பூங்கா அமைக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு ஏரியில் உள்ள பூங்காவிற்கு ஏராளமான மக்கள் வருகை புரிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மீன் கண்காட்சியகத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு ஏரியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு பணியை மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
கடல்வாழ் உயிரினங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றே மீன்கள் கண்காட்சியகம் அமைக்கபடுகிறது. அறிய வகை மீன்கள் கண்காட்சியகத்தில் இடம்பெறும்.
சேத்துப்பட்டு ஏரி, படகுகள் குழாம் மேம்படுத்தப்படும். சேத்துப்பட்டு ஏரியில் 6 கோடி ரூபாயில் பூங்கா அமைக்கப்படும்.
வார இறுதி நாட்களில் சேத்துப்பட்டு ஏரிக்கு 2 ஆயிரம் மக்கள் வருகின்றனர். எனவே சுற்றுலாத்துறையை மேம்படுத்த முக்கியத்துவம் தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.