
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக நலன்கள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தினேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
மாநில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான நிதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்டு தங்கள் மாநில திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கும்படி வலியுறுத்துவார்கள்.
அதன்படி இந்த ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றே விமானம் மூலம் டெல்லி சென்றார்.
தொடர்ந்து இன்று காலை டெல்லியில் 41 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுவை வாங்கி கொண்டு கூட்டத்திற்கு சென்றார்.
நிதி ஆயோக் கலந்து கொண்ட எடப்பாடி பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரை வலியுத்தியுள்ளோம்.
விவசாயிகள் அளித்த மனுவையும் பிரதமர் மோடியிடம் கொடுத்துள்ளேன்.
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் நலன்களை வலியுறுத்தியுள்ளேன்.
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.