மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு கொண்டால்... நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு..!

By Thiraviaraj RMFirst Published Aug 7, 2021, 11:18 AM IST
Highlights

மனைவியின் உடல் தனக்கு சொந்தமானது என கருதி அவரது விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வது கணவர் மனைவி மீது செலுத்தும் வல்லுறவே ஆகும்.

திருமணத்திற்கு பின்பு கணவரால் மனைவி அனுபவிக்கும் பாலியல் வன்முறை  விவகாரத்து கோருவதற்கு போதுமான காரணமாக உள்ளது என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

1995 ஆம் ஆண்டு ரியஸ் எஸ்டேட் பிசினஸ் செய்துவந்த ஒருவருக்கு டாக்டர் ஒருவர் தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார். ஒரு கார், வீடு, 501 சவரன் நகை அவருக்கு வரதட்ச னையாகக் கொடுக்கப்பட்டது. ஆனால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மணமகளின் குடும்ப்பம் ரூ.77 லட்சத்தையும் கொடுத்திருக்கிறது.

இதையடுத்து கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர் மனைவி, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார். அவர் தாக்கல் செய்த மனுவில், தனது விருப்பமின்றி தன் கணவர் பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும்  உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2009 ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து வழங்கியது.


இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கணவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் முகமது முஸ்டாக் மற்றும் கவுசர் எடப்பாகத் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரித்த நீதிபதிகள், மனைவியின் விருப்பத்தையும் உணர்வுகளை அவரது கணவர் மதிக்கவில்லை.  தனது மனைவியின் உடல் தனக்கு சொந்தம் என்ற எண்ணத்தில் அவரது கணவர் இருந்துள்ளார். நவீன சமூக நீதித்துறையில் அப்படி எந்த எண்ணத்திற்கும்  இடமில்லை. இருவரும் சமம் என்ற நிலையே உள்ளது. எனவே, மனைவி மீது எவ்வித எதேச்சதிகாரத்தையும் கணவர் கோர முடியாது. மனைவியின் உடல் தனக்கு சொந்தமானது என கருதி அவரது விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வது கணவர் மனைவி மீது செலுத்தும் வல்லுறவே ஆகும்.

பணம் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதோடு, பிறருடன் அவரை தொடர்புப்படுத்தி பேசியது கொடுமையாகும். ஆகவே,  மனைவியின் சுய உரிமையை மதிக்காமல் அவர் மீது உரிமை செலுத்த முயன்ற கணவரின் செயல் வல்லுறவாக கருதப்படும். இதனை காரணமாக காட்டி விவாகரத்து கோரலாம்’ என்று தீர்ப்பளித்தனர்.

click me!