ஓபிஎஸ் சம்மதித்தால் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர தயார் - புகழேந்தி பேட்டி

By Velmurugan s  |  First Published May 2, 2023, 8:30 PM IST

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரித்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயார் என அவரது ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, தனியார் உணவகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுகவின் பொதுக்குழுவ செல்லாது என ஓபிஎஸ் அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்திய பிறகுதான் பிற அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பொதுக்குழுவை கலைத்தது குறித்து நீதிமன்றம் செல்லட்டும்.

Tap to resize

Latest Videos

அதிமுக ஆட்சியின்போது ஊழல்வாதிகள் என கூறியவர் அமித்ஷா. தமிழகத்தில் வருமான வரித்துறையினரின் ரெய்டு உள்ளிட்டவற்றை செய்து காட்டியவர் அமித்ஷா. ஆனால் இன்று ஊழல்வாதிகளாக குற்றம்சாட்டப்பட்டவர்களுடனே அமர்ந்து பேசியிருப்பது நியாயம் தானா? திருச்சியில் நடந்த மாநாடு என்பது தென் தமிழகத்தினர் மட்டுமே பங்கேற்ற பெருங்கூட்டம்.. சேலத்திலும் மாபெரும் மாநாட்டை நடத்திட ஓபிஎஸ் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பறையடித்து பாடையுடன் ஊர்வலம் வந்த மக்கள்

கர்நாடகா சட்டமன்ற  தேர்தலை பொறுத்தவரையில் எங்களை காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா கட்சிகள் ஆதரவை கேட்டு வருகின்றன. ஓபிஎஸ் அவர்கள் அறிவித்தால் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக ஆதரவு வழங்கிட தயார் என்றார்.

click me!