பிராமணர்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்றும் ஆர்ஜேடி தலைவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அவர்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் என்றும் ஆர்ஜேடி தலைவர் ஒருவர் சர்ச்சையை கிளப்பியுள்ளார். கடந்த வாரம் பீகாரின் சுபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ், பிராமணர்கள் யாரும் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று டிஎன்ஏ சோதனை காட்டுகிறது என்றும், அவர்களை விரட்டுங்கள் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார். அவரின் இந்த கருத்துக்கு சமூக ஊடகங்களில் பல தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்வினைகள் வந்தன.
இதையும் படிங்க : 10000 காலியிடங்கள்.. அங்கன்வாடிகளில் வேலை.. என்ன தகுதி.. எப்படி விண்ணப்பிப்பது..?
கடந்த 29-ம் தேதி நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "டிஎன்ஏ சோதனையில் பிராமணர்கள் யாரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை, ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள், இப்போது இங்கு குடியேறியுள்ளனர். பிராமணர்கள் நம்மைப் பிரித்து ஆட்சி செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களை இங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும். யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்" என்றும் கூறினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரின் இந்த கருத்துக்கு பாஜக, பீகாரில் ஆர்ஜேடி ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளும் ஜேடி(யு) ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜே.டி.யு செய்தித் தொடர்பாளர் அபிஷேக் ஜா, ஆர்.ஜே.டி தலைவரின் கருத்துக்கள் "கொடூரமானவை" என்றும், RJD தலைவர்கள் செய்திகளில் இருக்கவே இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்கள் என்றும் கூறினார்.
“பரசுராமர் ரஷ்யாவிலிருந்து வந்தாரா அல்லது வேறு நாட்டிலிருந்து வந்தாரா? அத்தகைய தலைவர்களுக்கு எதிராக ஆர்ஜேடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்ஜேடி தலைவர்கள் இதுபோன்ற கருத்துக்களைக் கூறுவதன் மூலம் மகாகத்பந்த கூட்டணியின் இமேஜையும் டேமேஜ் செய்கின்றனர். ” என்று தெரிவித்தார்.
இதே போல் ஆர்.ஜே.டி தலைவரின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக தலைவர் அமித் ரக்ஷித் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவில் " இப்படிப்பட்டவர்கள்தான் நம் தேசத்தில் வகுப்புவாதப் பிளவுக்குக் காரணம், அவர்கள் பீகாரை ஆள்வதுதான் நகைமுரண்! அவரின் இந்த கருத்து வெட்கக்கேடானது/” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து மத நூலான ராமசரித்மனாஸ் சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது என்று ஆர்ஜேடி தலைவரும் பீகார் கல்வி அமைச்சருமான சந்திர சேகர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் ஆர்ஜேடி தலைவர் பிராமணர்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க ; அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க முடியாது.. நோ சொன்ன உயர்நீதிமன்றம்.!