கர்நாடக தேர்தல் பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட உள்ள பிரதமர் மோடியின் ஓவியம் வெளியாகி உள்ளது.
கடந்த மார்ச் 29-ம் தேதி கர்நாடக தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 224 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு மே 10-ம் தேதி வாக்குப்பதிவும், மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரதமர் மோடி மாநிலம் முழுவதும் 22 பேரணிகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கடந்த வாரம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக ரூ.830 கோடி செலவு.. ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் அடுத்த வாரம் மீண்டும் கர்நாடகா வருகிறார். இன்று சித்ரதுர்கா, விஜயநகரம், சிந்தனூர், கலபுர்கி ஆகிய இடங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். மே 3-ஆம் தேதி மூடபித்ரி, கார்வார், கிட்டூர் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்பதற்காக, நிலக்கடலையால் பிரம்மாண்டமான மாலையும் கிரீடமும் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடிக்கு அவரது தாயார் நெற்றியில் பொட்டி வைப்பது போன்ற ஓவியம் ஒன்றும் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த ஓவியம் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளது. இந்த ஓவியத்தை கிரியேட்டிவ் வீரேஷ் என்பவர் வரைந்துள்ளார். அவர் பிரதமர் மோடியின் ஓவியத்தை வரையும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
இதனிடையே மே 6 ஆம் தேதி பிரதமர் மோடி சித்தப்பூர், நஞ்சன்கூடு, துமகுரு , பெங்களூரு தெற்கு ஆகிய இடங்களில் இருக்கிறார். பிரச்சாரம் முடிவடைவதற்கு முந்தைய இறுதி நாளான மே 7 ஆம் தேதி பிரதமர் மோடி 4 பேரணிகளில் உரையாற்றுகிறார். பாதாமி, ஹாவேரி, ஷிவமொக்கா மற்றும் பெங்களூரு சென்ட்ரல் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
கர்நாடக தேர்தலை பொறுத்தவரை பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக உள்ளனர். அக்கட்சியின் பிரசாரக் குழுவுக்கு முதல்வர் பஸ்வராஜ் பொம்மை தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காளி படத்தை அவமரியாதை செய்து பதிவிட்ட விவகாரம்.. மன்னிப்பு கேட்ட உக்ரைன் அமைச்சர்