அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாபநாசம் மற்றும் ஒரத்தநாட்டிற்கு நாளை மறுதினம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டர்களை சந்திக்கும் இபிஎஸ்
அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறார். மேலும் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகளை தங்கள் அணிக்கு இழுத்து வருகிறார். இதனையடுத்து அமமுக வெற்றி பெற்ற ஒரே பேரூராட்சி ஒரத்தநாடு மட்டுமே. பேரூராட்சி தலைவராக இருப்பவர் மா.சேகர், தஞ்சை மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த வைத்தியலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருப்பதால் அவருக்கு எதிராக அரசியல் செய்ய மா.சேகர் சரியாக இருப்பார் என்ற காரணத்தால் எடப்பாடி அணிக்கு அவரை இழுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொய்யான தகவல் அளித்த அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு..! இறங்கி அடிக்கும் டி ஆர் பாலு
டிடிவி அணியின் முக்கிய நிர்வாகி
இதனையடுத்து கடந்த வாரம் மா.சேகர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் தஞ்சை மாவட்ட அமமுக நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மிகப்பெரிய அளவிலான பொதுக்கூட்டம் மே மாதம் 4 ஆம் தேதி ஒரத்தநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படவதாக அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 4.5.2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம்,
இபிஎஸ் பயணம் ஒத்திவைப்பு
பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமம், அம்மா அரங்கத்தில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும். முன்னாள் அமைச்சருமான மறைந்த திரு. இரா. துரைக்கண்ணு அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும்; அதனைத் தொடர்ந்து ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதாக இருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவரும் நிலையில், மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு, 15.5.2023 - சனிக் கிழமை அன்று நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்