விரைவில் அதிமுக ஆட்சி.! நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம், பாதுகாப்பு- இபிஎஸ் உறுதி

By Ajmal Khan  |  First Published May 2, 2023, 11:32 AM IST

நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த திமுகஆட்சியில் இடம் கிடையாது என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,  விரைவில் கழக ஆட்சி மலரும் , நிர்வாக திறமையோடு நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


விஏஓ ராஜினாமா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த துரை பிரிதிவிராஜ். 2011-ம் ஆண்டு முதல்  இவர் தனது சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்தநிலையில்  ஒரு கிராம நிர்வாக அலுவலராய் விதிகளுக்கு உட்பட்டு அதிகாரத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன் ஆனாலும் எந்த ஒரு மாற்றத்தையும் இந்த கட்டமைப்பில் என்னால் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் என்னை தொடர்ந்து கொண்டே இருப்பதாக கூறி தனது பதவியை பிரிதிவிராஜ் ராஜினாமா செய்திருந்தார். இது சமூகவளைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் ஒன்னை வெளியிட்டுள்ளார். அதில்,  கடந்த வாரம் நேர்மையாக பணியாற்றிய VAO தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்,

Latest Videos

நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை

சில தினங்களுக்கு முன்னால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு VAO மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு  ஆளாக்கப்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் , தற்போது 2019 அதிமுக ஆட்சியில் சிறப்பாக பணியாற்றி என்னிடம் விருது பெற்ற கிராம நிர்வாக அதிகாரி அருப்புக்கோட்டை ,களக்காரி VAO திரு.துரை.பிருத்விராஜ் தற்போது தன் பணியை நேர்மையாக செய்ய இயலவில்லை என்பதால் வேலையை ராஜினாமா செய்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த விடியா ஆட்சியில் இடம் கிடையாது என்பதும் இதன்மூலம்  நிருபணமாகிறது,

விரைவில் அதிமுக ஆட்சி

இவ்வாட்சியில் அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததாலும் , மக்கள் பணி செய்வதற்கு நிர்வாகமே தடையாக இருப்பதாலும் பல்வேறு நிர்வாக திறமையுள்ள அதிகாரிகளை இழந்து வருகிறோம் , அரசு அதிகாரிகள் என்றும் மனம் தளராது, தொடர்ந்து மக்களுக்கு நல்ல பணிகள் பல  செய்திட வேண்டுகோள் விடுக்கிறேன்,விரைவில் கழக ஆட்சி மலரும் , நிர்வாக திறமையோடு நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி கூறுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பொய்யான தகவல் அளித்த அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு..! இறங்கி அடிக்கும் டி ஆர் பாலு

click me!