போதை பழக்கத்திற்கு அடிமையாகி இளைஞர்கள் சீரழிவதற்கு திமுக தான் காரணம் - வேலுமணி குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published May 2, 2023, 8:12 PM IST

கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாகி இளைஞர்கள், மாணவர்கள் சீரழிவதற்கு திமுக தான் காரணம் என் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டி உள்ளார்.


கோவை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொள்ளாச்சி பல்லடம் சாலை ராஜேஸ்வரி திடலில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் PRK குருசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் SP  வேலுமணி பேசும் போது, அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது. ஆனால் தற்போது காவல்துறை தனது  பணியை செய்வதில்லை அடிமைபோல் செயல்படுகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கஞ்சா விற்பனையில்  ஈடுபட்டவர்கள் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 1250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Latest Videos

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ராகி வழங்கும் திட்டம் - நாளை முதல் துவக்கம்

இளைஞர்கள், மாணவர்கள் சீரழிவதற்கு காரணம் திமுக. அரசு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. விரைவில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும். திமுக ஆட்சியில் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. திமுக குடும்பத்தினர் மணல் லாரிகளில் வசூல் செய்கின்றனர்.

கேட்டது காலிஃப்ளவர் தோசை, கிடைத்தது கரப்பான் பூச்சி தோசை - அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்

தமிழகத்திலிருந்து அதிகளவு கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதைக் காவல்துறை கண்டு கொள்வதில்லை சாதாரண மக்கள் வீடு கட்ட முடியவில்லை. எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது, தொழிலாளர்கள் வேலை இழப்பு, மின்வெட்டு மின் கட்டண உயர்வு, சொத்து வரியை உயர்த்தி மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக திமுக அரசு உள்ளது என குற்றம் சாட்டினார்.

click me!