நான் பேச ஆரம்பித்தால் யாரும் பேச முடியாது.. அவ்ளோ சரக்கு இருக்கு.. எடப்பாடி குருப்பை மெர்சல் ஆக்கிய ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Aug 29, 2022, 8:04 PM IST
Highlights

அதிமுக தலைமையில் மூட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் என் வீட்டிலேயே நானே எதற்கு திருட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றியுள்ளார். தேனியில் தொண்டர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 
 

அதிமுக தலைமையில் மூட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் என் வீட்டிலேயே நானே எதற்கு திருட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றியுள்ளார்.தேனியில் தொண்டர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி  எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாகவும், தற்காலிய பொதுச் செயலாளராகவும் அறிவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அன்றைய தினமே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றார். அப்போது அந்த இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் வெடித்தது.  பின்னர் அது கலவரமாக மாறியது, இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். 

எடப்பாடி பழனிச்சாமி நடத்திய பொதுக்கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில், சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 11ம் தேதி நடத்திய பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு அளித்தது, இது பழனிச்சாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஓபிஎஸ் தரப்புக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் முகாமிட்டு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசி வருகிறார், இன்று மாலை அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற போது 2 கோடி ரூபாய் பற்றாக்குறை, இன்றைக்கு 258 கோடி ரூபாய் கழகத்தினுடைய நிதி உயர்ந்துள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்ல பல நடவடிக்கைகளின் காரணமாக அந்த நிதி உயர்ந்தது,  ஒவ்வொரு ஆண்டும் நான்தான் கழகத்தின்  நிதியை பொருளாளராக இருந்து  கணக்கு பார்த்து வருகிறேன், கடந்த ஆண்டு எவ்வளவு நிதி இருந்தது,  இந்த ஆண்டு எவ்வளவு வருவாய் வந்திருக்கிறது, எவ்வளவு செலவு என்று கடந்த 12 ஆண்டு காலமாக நான் பொதுக் குழுவில் அதை படித்து வருகிறேன். ஆனால் இந்த முறை என்னை படிக்கவிடவில்லை.

பொதுக் குழுவில் 5 பேர் தார்மானத்தை முன்மெழிந்து பேச வேண்டும் ஆனால் சிவி சண்முகம் என்கிற ஒரு ஆள் எழுந்திருந்து 23 தீர்மானங்களும் ரத்து, ரத்து, ரத்து என்கிறார், எதற்காக அவர்  எழுந்தார், எதற்காக அவர் அப்படி பேசினார் என்றே தெரியவில்லை, அப்படி எல்லாம் ஒரு பொதுக் குழுவில் பேசக்கூடாது, இது கவுரமான முறையில் நடக்கவேண்டிய பொதுக்குழு, ஒன்றரைகோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கத்தின் பொதுக் குழு எம்ஜிஆர் அவர்களால், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட இயக்கம், 

பொதுக் குழு அன்று காலையில் ஆறு மணிக்கு தலைமைக் கழகத்திற்கு போய், வழியிலே 200 இருக்க்களை போட்டு அமர்ந்து, தலைமை கழகத்தை பூட்டி வைத்திருக்கிறார்கள், இவர்களுக்கு யார் தலைமை கழகத்தை பூட்ட அதிகாரம் கொடுத்தது? இது யார் வீட்டு சொத்து, இது அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? ஜானகி அம்மாள் தன்னுடைய சொத்தை கழகத்திற்காக எழுதிக் கொடுத்தார், இது அவர் கொடுத்த சொத்து, பொதுக்குழு அங்கு நடக்கும் போது அங்கு போகாமல் இவர்களுக்கு இங்கு என்ன வேலை? நான் திருடிச் சென்று விட்டேன் என்று சொல்கிறார்கள்,  எதற்கு நான் திருடப்போகிறேன் என் வீட்டில் நான்  திருடுவேனா?

ஜானகி அம்மாவுக்கு நான் பூத் ஏஜென்ட்டாக இருந்தேன் என்று சொல்கிறார்கள், அப்படி இல்லவே இல்லை, அதற்கு நான் இப்போது ஜெசிடி பிரபாகரன் மூலம் மறுப்பு தெரிவிக்க சொல்லி இருக்கிறேன், என்ன பேசுவது என்று தெரியாமலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள். மிக குழப்பமான பிரச்சினை சென்று கொண்டிருக்கிறது, இந்த சூழ்நிலையில்தான் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டுமென நான் அழைப்பு விடுத்தேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெரிய அளவில் தோல்வி சந்தித்தோம்,  அப்போது நான் தலைமை கழகத்தில் பேசுகையில் 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம்,  

நாம் தொகுதி தொகுதியாக சென்று வேலை செய்வோம் என்று கூறினேன், ஆனால் யாரும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை, என்ன அடி மடியிலேயே கை வைக்கிறார் என்று சில அமைச்சர்கள் சொல்லிக்கொண்டார்கள், நாம் தொகுதிக்கு சென்று இளைஞர்களைப் இந்த கட்சிக்கு கொண்டு வந்தால் தானே அவர்கள் நாளைக்கு நல்ல பதவிக்கு வரமுடியும்? இப்போது பதவி ஆசையில் பேசுகிறேன் என்று சொல்லுகிறார், நான் பேச ஆரம்பித்தால் யாரும் பதில் பேச முடியாது, அவ்வளவு சரக்கு இருக்கு ஓபிஎஸ் பேசினார். 
 

click me!