தமிழக முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது அமைச்சரவை கூட்டம்.. பல்வேறு விஷயங்கள் குறித்து அலோசனை

By Ezhilarasan BabuFirst Published Aug 29, 2022, 6:24 PM IST
Highlights

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள நல திட்டங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள நல திட்டங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது, தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதிலும் சில முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது,  ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என தமிழக முதலமைச்சர் உறுதியாக கூறிவருகிறார். இந்நிலையில்தான் தமிழக அமைச்சரவைக் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று கூடியுள்ளது.

இதையும் படியுங்கள்: திமுக மாநகர கழக தேர்தல் முடிவுகள்.. 3 மாநகர மாவட்ட செயலாளர்கள் நீக்கம்.. அமைச்சர் மகனுக்கு முக்கிய பதவி..!

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது மற்றும் மின்சார கட்டண உயர்வு பால் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது, குறிப்பாக புறநகர்ப் பகுதியில் அமைய உள்ள பரந்தூர் புதிய விமான நிலைய விரிவாக்கம், ஆன்லைன் ரம்மிக்கு தடைச்சட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிலதா மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம், கொடநாடு கொலை வழக்கு, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இதில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்: சசிகலா, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க ஓபிஎஸ் திட்டம்.. ஜெசிடி பிரபாகரன் அதிரடி தகவல்.

தமிழகத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது, அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த முதலமைச்சர் அறிவுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது, ஆறுமுகசாமி ஆணையம் கொட்துள்ள ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிக்கையை சட்டமன்றத்தில் வைப்பதா, அல்லது நேரடியாக மக்கள் மத்தியில் வைப்பதா என்பது குறித்தும் விரிவாக ஆராய்ந்து ஆலோசிக்கப்படஉள்ளது, எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்  வெள்ள தடுப்பு நடவடிக்கைகள்,

மழைநீர் வடிகால் பணி, பாதாள சாக்கடை திட்டம், மற்றும் பரந்தூர் விமான நிலைய திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது,  பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசின் நிலைப்பாடு, மாநில கல்வி கொள்கை, கல்வி தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்டவைகள் குறித்து இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  
 

click me!