சசிகலா, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க ஓபிஎஸ் திட்டம்.. ஜெசிடி பிரபாகரன் அதிரடி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Aug 29, 2022, 2:54 PM IST
Highlights

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்தால் கட்சி பலமாக இருக்கும் என ஓ. பன்னீர்செல்வம் உறுதியாக நம்புவதாக அவரின் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரன் கூறியுள்ளார்

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்தால் கட்சி பலமாக இருக்கும் என ஓ. பன்னீர்செல்வம் உறுதியாக நம்புவதாக அவரின் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரன் கூறியுள்ளார். ஓபிஎஸ் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவில் இணைந்து பயணிக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஜேசிடி பிரபாகரன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிமுகவை கைப்பற்றுவதற்கான அதிகாரப் போட்டி நடந்து வருகிறது, இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, இது ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது, இந்நிலையில்தான் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் கட்சியில் இணைக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறி வருகிறார். மேலும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவில் இணைந்து பயணிக்க அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

இதையும் படியுங்கள்: திமுக மாநகர கழக தேர்தல் முடிவுகள்.. 3 மாநகர மாவட்ட செயலாளர்கள் நீக்கம்.. அமைச்சர் மகனுக்கு முக்கிய பதவி..!

இந்நிலையில் பழைய பாசத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்னை அண்ணன் என அழைத்துள்ளார் எனவே மனக்கசப்பு வேறுபாடுகளை மறந்து செயல்படுவோம் என டிடிவி தினகரன் அமமுக தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரன் இன்று சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு:- அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலைக்கு யார் காரணம் இன்று தகவலை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன், ஓபிஎஸ் ஜானகி அணியில் பெரியகுளம் பூத் ஏஜெண்டாக செயல்பட்டவர் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: அர்ச்சகர் நியமனத்திற்கு தடை விதிங்க...! சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கைக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி

ஆனால் அது முற்றிலும் தவறானது, தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார், அதேபோல் ஜானகி ஒன்றும் தீண்டத்தகாதவர் அல்ல, அவர் இரட்டை இலைக்காக தனது அரசியை தியாகம் செய்தவர், எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கள் காட்சியைஒற்றுமைப்படுத்துவதாக தெரியவில்லை, அதே போல் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லும் உரிமை ஓபிஎஸ்க்கு உள்ளது,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன அளவில்தான் எடப்பாடி பழனிச்சாமி நிலை உள்ளது.

ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தினார் என்றால், யாரோ ஒருவரின் பிடியில் கட்சி செல்லக்கூடாது எனக்கூறி தான் அன்று தர்மயுத்தம் நடத்தினார், அன்று ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் கட்சி சென்று விடக்கூடாது என்பதற்காக அவர் அப்படிப் பேசினார், ஆனால் இன்று கட்சி ஐந்து பணக்காரர்களின் கையில் சென்று விடக்கூடாது என போராடி வருகிறார், இதேபோல் தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் குறித்து காவல்துறை முழுமையான சிசிடிவி காட்சிகள் வெளியிட்டால் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரத்துக்கு யார் காரணம் என்று தெரியவரும்.

இதேபோல் சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருப்பதால் கட்சிதான் பலமாக இருக்கும் என ஓபிஎஸ் உறுதியாக நம்புகிறார், அவர்களை நேரில் சந்தித்து எப்போது அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதெல்லாம்  ஓபிஎஸ் முடிவு செய்வார்.  இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!