திமுக மாநகர கழக தேர்தல் முடிவுகள்.. 3 மாநகர மாவட்ட செயலாளர்கள் நீக்கம்.. அமைச்சர் மகனுக்கு முக்கிய பதவி..!

By vinoth kumarFirst Published Aug 29, 2022, 1:57 PM IST
Highlights

21 மாநகராட்சிகளில் சென்னை, கோவை தவிர மற்ற மாநகர கழக தேர்தல் முடிவு இன்றைய முரசொலியில் வெளியாகியுள்ளது. அதில், பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகனுக்கும், இளைஞரணியை சார்ந்த ஒருவருக்கும் மாநகர செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

 21 மாநகராட்சிகளில் சென்னை, கோவை தவிர மற்ற மாநகர கழக தேர்தல் முடிவு இன்றைய முரசொலியில் வெளியாகியுள்ளது. அதில், பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகனுக்கும், இளைஞரணியை சார்ந்த ஒருவருக்கும் மாநகர செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

திமுகவின் 15வது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் இரு அணிகளாக பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் களமிறங்கினர். 

இந்த 21 மாநகராட்சிகளில் சென்னை, கோவை தவிர மற்ற மாநகர கழக தேர்தல் முடிவு இன்றைய முரசொலியில் வெளியாகியுள்ளது. இதில், ஆவடி மாநகர செயலாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் மகன் ஆசிம் ராஜா தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகர செயலாளராக, திருச்சி மேயர் அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிதாக இளைஞரணியை சார்ந்த சண்.ராமநாதன் புதிய மாநகர செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகர செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ் லெட்சுமணன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக திமுக தொழிற்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

click me!