அதை மட்டும் செய்திருந்தால் வெற்றிக்கனி எனக்கே கிடைத்திருக்கும்..! கதறும் ட்ரம்ப்..!

Published : Nov 07, 2020, 10:59 PM IST
அதை மட்டும் செய்திருந்தால் வெற்றிக்கனி எனக்கே கிடைத்திருக்கும்..! கதறும்  ட்ரம்ப்..!

சுருக்கம்

சட்டரீதியான வாக்குகளை மட்டும் எண்ணியிருந்தால் நான் வெற்றிபெற்றிருப்பேன் என்று டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

சட்டரீதியான வாக்குகளை மட்டும் எண்ணியிருந்தால் நான் வெற்றிபெற்றிருப்பேன் என்று டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்ம், இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டார்.


கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தேர்தலில் பல லட்சக்கணக்கானோர் தபால் முறையில் வாக்களித்தனர். ஆனால், தபால் வாக்குகளில் மோசடி ஏற்படும் எனவும், தபால் முறையை தவிர்க்க வேண்டுமெனவும் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து புகார் கூறிவந்தார்.இந்நிலையில், பின்னடைவை சந்தித்தபின் வாக்குப்பதிவில் மோசடி நடைபெற்றுள்ளதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், பைடன் வெற்றிபெற்றதாக கூறப்படும் மாகாணங்களில் முடிவை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தப்போவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சட்டரீதியான வாக்குகளை மட்டும் எண்ணியிருந்தால் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பேன் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “சட்டரீதியான வாக்குகளை மட்டும் எண்ணியிருந்தால் அதிபர் தேர்தலில் நான் ஈசியாக வெற்றிபெற்றிருப்பேன்.வாக்கு எண்ணிக்கையின்போது வெளியாட்கள், நோக்காளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, இந்த சூழலில் எண்ணப்பட்ட அனைத்து வாக்குகளுமே சட்டவிரோதமான வாக்குகள்தான். இதில் உச்சநீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்! பொங்கியெழுந்த இபிஎஸ்!
நாத்திகத்தை கக்கத்தில் போட்டு... ஆத்திகத்தில் கரைந்த திராவிடமாடல் கொள்கை..! ஆண்டாள் வேடமிட்ட திமுக எம்பி., தமிழச்சி..!