நான் காலடி எடுத்து வைத்தால் இந்தியாவை விட்டு கொரோனா ஓடிவிடும்... சாமியார் நித்யானந்தா சர்ச்சை பேச்சு..!

By Asianet Tamil  |  First Published Jun 6, 2021, 9:44 PM IST

நான் காலடி எடுத்து வைத்தால்தான் இந்தியாவை விட்டு கொரோனா ஓடும் என்று சாமியார் நித்யானந்தா சர்ச்சையாகப் பேசியுள்ளார்.
 


பல்வேறு புகார்களுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா, கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்வில் உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார் நித்யானந்தா. அந்த நாட்டுக்கு தன்னை அதிபராகவும் அறிவித்துக்கொண்டார். கைலாசாவுக்கு வர விரும்புவோர் வரலாம் என்றும் அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த கைலாசா தீவு தென் கிழக்கு ஆசிய பசிபிக் பகுதிகளில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
இந்நிலையில் தலைமறைவில் நித்யானந்தா இருந்தாலும் அவ்வப்போது ஆன்லைன் மூலம் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். அண்மையில் திருப்பதி வெங்கடாஜலபதி சாமியைப் போல அலங்காரம் செய்துகொண்டு அந்த புகைப்படங்களை ஆன்லைவில் உலவவிட்டார். தற்போது ஆன்லைனில் மீண்டும் சொற்பொழிவை நித்யானந்தா நிகழ்த்தியுள்ளார். அதில் பல விஷயங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார்.

 
இந்த சொற்பொழிவின் போது இந்தியாவில் கொரோனா எப்போது போகும் என்று சீடர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். “அம்மன் என் உடலில் புகுந்துள்ளது. இந்தியாவில் நான் காலடி எடுத்து வைத்தால்தான் இந்தியாவை விட்டு கொரோனா ஓடும்” என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். நித்தியானந்தாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 

Tap to resize

Latest Videos

click me!