பாஜக வழியில் உறுதியான முடிவை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி... நாராயணன் திருப்பதி..!

By vinoth kumarFirst Published Jun 6, 2021, 5:20 PM IST
Highlights

அதிமுக தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் வக்கற்ற அடிமை அரசு மத்திய பாஜக அரசு வழியில் +2 தேர்வை ரத்து செய்து விட்டது என்ற திமுக அறிக்கை வந்திருக்கும் என நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் வக்கற்ற அடிமை அரசு மத்திய பாஜக அரசு வழியில் +2 தேர்வை ரத்து செய்து விட்டது என்ற திமுக அறிக்கை வந்திருக்கும் என நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.

பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த 3 நாட்களாக பள்ளியில் தொடங்கி பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சட்டப்பேரவை கட்சிகளின் பிரதிநிதிகள், மருத்துவ மற்றும் உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் பல்வேறு தரப்பினரும் பொதுத்தேர்வு நடத்துவதற்கு ஆதரவாகவும் மறுத்தும் கருத்துகளை தெரிவித்தனர். எனினும், அனைத்துத் தரப்பினரும் மாணவர்களின் உடல்நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

கொரோனா 2-ம் அலை பரவல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தீவிரமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 3-வது அலையும் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தற்போதுள்ள விதிகளின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும். இதன்காரணமாக தடுப்பூசி போடப் படாத பிளஸ் 2 மாணவர்களை தேர்வு எழுத ஒரே நேரத்தில் வரச் செய்வது, நோய்த்தொற்றை அதிகரிக்கச் செய்ய லாம் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தேர்வை தள்ளிவைப் பது, மாணவர்களை மனதளவில் பாதிக் கும் என்பதால் பொதுத்தேர்வு இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்யப் படுகிறது.

இந்நிலையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்ய, பள்ளிக்கல்வித் துறை செயலர் தலைமையில், உயர்கல்வித் துறை செயலர், சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப் படும். இக்குழு சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்படும். அந்த மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், கூட்டணி கட்சிகள் எதிர்த்த போதும், பாஜகவின் வழியில் உறுதியான முடிவை எடுத்த முதல்வருக்கு நன்றி என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பாஜக செய்திதொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வக்கற்ற அடிமை தமிழக அரசு மத்திய பாஜக அரசு வழியில் +2 தேர்வை ரத்து செய்து விட்டது என்ற திமுக அறிக்கை வந்திருக்கும் அதிமுக அரசு தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால்.

"வக்கற்ற அடிமை தமிழக அரசு மத்திய பாஜக அரசு வழியில் +2 தேர்வை ரத்து செய்து விட்டது" என்ற தி மு க அறிக்கை வந்திருக்கும் அ தி மு க அரசு தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால்!

கூட்டணி கட்சிகள் எதிர்த்த போதும், பாஜகவின் வழியில் உறுதியான முடிவை எடுத்த முதல்வருக்கு நன்றி.

— Narayanan Thirupathy (@Narayanan3)

கூட்டணி கட்சிகள் எதிர்த்த போதும், பாஜகவின் வழியில் உறுதியான முடிவை எடுத்த முதல்வருக்கு நன்றி என்று அவர் பதிவிட்டுள்ளார்.

click me!