'எங்கே போனாலும் ரஜினி மருமகன்'.. 'அப்போ நான் யாரு'.. தலைக்கு ஏறிய ஈகோ.. மனைவியை தூக்கி எறிந்த தனுஷ்..

Published : Jan 18, 2022, 04:11 PM IST
'எங்கே போனாலும் ரஜினி மருமகன்'.. 'அப்போ நான் யாரு'.. தலைக்கு ஏறிய ஈகோ.. மனைவியை தூக்கி எறிந்த தனுஷ்..

சுருக்கம்

வளர்ந்து உச்ச நட்சத்திரமான பின்பும் எங்கு சென்றாலும் ரஜினியின் மருமகன், அதனால்தான் அவருக்கு இத்தனை வாய்ப்புகளும் கிடைக்கிறது என்ற பேச்சு  அடிபடுவதாகவும் அதை தனுஷ் கொஞ்சம் கூட விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. தானாக விரும்பி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளவில்லை அவர்களாகதான் விரும்பி வந்தார்கள் என்பதை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனுஷ் வெளிப்படுத்தி வந்ததும் இதனால்தான் என்று கூறப்படுகிறது.   

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா  விருப்பம் இல்லாமல் தான் திருமணம் செய்து கொண்டனர் என கூறப்பட்டு வந்த நிலையில், 18 ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது ரஜினி ரசிகர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தாங்கள் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள தங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை எனவும் இருவரும் அறிக்கை வெளியிட்டிருப்பது திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகன் மருமகனின் இந்த திடீர் முடிவால் ரஜினி குடும்பம் இடிந்துபோய் இருக்கிறது. இந்த செய்தியை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். தனது 21 வயதில் தன்னைவிட மூத்தவரான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் தனுஷ். அப்போது இந்த திருமணம் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இதுபோன்ற திருமணங்கள் எல்லாம் எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் என பலரும் அப்போது கேள்வி எழுப்பினர். ஆனால் பலரும் ஆச்சரியப்படும் வகையில் தனுஷ் ஐஸ்வர்யா திருமணம் வாழ்க்கை 18 ஆண்டுகளை கடந்துள்ளது.

அவர்களுது மூத்த மகன் யாத்ராவுக்கும் 16 வயது ஆகிறது. 18 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்திய தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் திடீரென பிரிய காரணம் என்ன என்ற கேள்வி தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் நீண்ட காலமாகவே மனக்கசப்பு இருந்து வந்தது, விருப்பம் இல்லாமல் தான் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் பிரிவுக்கு இது காரணம் அல்ல. அவர்கள் திருமணமாகி 16 ஆண்டுகளும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்தனர், ஆனால் சமீபத்தில்தான் இருவருக்குமிடையே திடீர் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது, அதுதான் என்ன என்று தெரியவில்லை என பலரும் கூறுகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற அதே மேடையில் தான், நடிகர் தனுஷும் அசுரன் படத்திற்காக தேசிய விருது வாங்கினார். அந்த நிகழ்ச்சியில் கூட  ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஒன்றாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அப்படியெனில் அதுவரையில் குடும்பத்தில் எந்த சலசலப்பும் இல்லாமல் தான் இருந்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இவர்களுக்கு திருமணமான 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் பல பஞ்சாயத்துகள் இவர்களின் குடும்பத்தில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்கின்றனர் சிலர்,  நடிகர் சிம்புவுக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மகனான ஐஸ்வர்யாவுக்கும் காதலாகி பல உச்சகட்ட பிரச்சனைகள்வரை சென்று, சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க ரஜினிகாந்த் மறுத்ததினால் தனுஷுக்கு ஐஸ்வர்யாவை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததாகவும் அப்போது சர்ச்சை பேச்சுகள் இருந்தது. இதுபோல ரஜினிகாந்த் குடும்பத்தில் ஆரம்பத்திலிருந்தே அவரது மகள்களால் பல பிரச்சினைகள் நடந்து வருகிறது. இதனால் சினிமாவில் முழுவதும் கவனம் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் ரஜினிகாந்த் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது. அதேபோல அவரது இரண்டாவது மகளுக்கு திருமணமாகி பின்னர் விவாகரத்து ஆகி மீண்டும் ஒரு திருமணம் செய்து வைத்த பின்னரே ரஜினி நிம்மதி அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தனுஷ் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள பிரிவு செய்தி ரஜினியின் தலையில் இடியாக விழுந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. 

அதேபோல் ஐஸ்வர்யா இயக்கிய 3 படங்களில் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் சில சண்டை ஏற்பட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல் பரவியது, அதில் சில எசகுபிசகான முத்தகாட்சிகளில் தனுஷ் நடித்ததில் ஐஸ்வர்யாவுக்கு அவர் மீது கசப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல் கடந்த சில மாதங்களாக நடிகை ஒருவருக்கும் தனுஷ்க்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே மெல்லிய விரிசல் பிளவாக வெடித்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருவருக்கும் இடையே பிளவு அதிகமாகி விட்டது என்றும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில்  இனியும் தனுசை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்த ஐஸ்வர்யா போயஸ் தோட்ட இல்லத்தில் யோக பள்ளி ஆரம்பித்து சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் கடந்த மூன்று மாதங்களாகவே அவர் ஐஸ்வர்யாவையும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறதது ஆனால் இதெல்லாம் சிறு சிறு காரணமாக இருக்கலாம் ஆனால் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக  ஈகோ பிரச்சனை இருந்து வந்த து அதன் வெளிபாடிதான் இந்த பிரிவுக்கு காரணம் என்றும் கூறுகின்றனர். 

வளர்ந்து உச்ச நட்சத்திரமான பின்பும் எங்கு சென்றாலும் ரஜினியின் மருமகன், அதனால்தான் அவருக்கு இத்தனை வாய்ப்புகளும் கிடைக்கிறது என்ற பேச்சு  அடிபடுவதாகவும் அதை தனுஷ் கொஞ்சம் கூட விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. தானாக விரும்பி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளவில்லை அவர்களாகதான் விரும்பி வந்தார்கள் என்பதை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனுஷ் வெளிப்படுத்தி வந்ததும் இதனால்தான் என்று கூறப்படுகிறது.   கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனுஷ் தற்போது கோலிவுட் பாலிவுட் என சர்வதேச அளவில் சினிமா படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளார். ஆனால் இதை ஐஸ்வர்யா கொஞ்சம் கூட விருப்பமில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு அதிகரித்ததாக தெரிகிறது. தனக்கு பின்னால் சூப்பர் ஸ்டார் என்ற பிம்பம் இருப்பதால் தனக்கு வாய்ப்புகள் வீடு தேடி வருகிறது என சினிமாத்துறையில் பலரும் பேசுவதை தனுஷ் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

எங்கு சென்றாலும் சூப்பர் ஸ்டார் மருமகன் என்றுதான் சொல்கிறார்களே தவிர தனுஷ் என்றோ, தனுஷ்கான அடையாளம் இல்லாமல் போவதை அவர் வெறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அவரது மனைவியிடம் நான் ஒன்றும் உங்கள் குடும்பத்தையோ, உங்கள் சொத்தையோ நம்பி இல்லை, இது போல என்னால் நூறு மடங்கு சம்பாதிக்க முடியும் என்று மனைவியிடமே வெளிப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்காகவே போயஸ் தோட்டத்தில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பில் அதில் நவீனத்துவ துடன் கூடிய வீடு கட்டப்பட்டு வருகிறது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் பிரிவுக்கு உண்மை காரணம் என்ன என்பது தனுஷ்க்கும் ஐஸ்வர்யாவுக்குமே தெரியும், அவர்கள் வாய்த்திறந்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும் என கூறப்படுகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?