ஏற்கனவே மக்கள் மின் கட்டண உயர்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் கணக்கீட்டாளர் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்கலாம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
ஏற்கனவே மக்கள் மின் கட்டண உயர்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் கணக்கீட்டாளர் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்கலாம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பை பலரும் பல வகையில் விமர்சித்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அப்போது மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் ஆனால் ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திற்குள் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்ற விமர்சனம் அரசுக்கு எதிராக எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மின்ஊழியர் சங்கத்தினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அவர்களது 23 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அமைச்சரிடம் வழங்கினர்.
இதையும் படியுங்கள்: நாளைக்கே தேர்தல் வைக்கட்டும்.!திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலை விட்டே விலகுகிறோம்.?செல்லூர்ராஜூ தடாலடி
இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் குடியிருப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது, இதேபோல் 100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட்டுகள் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மானியம் அளிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு 3 ஆயிரத்து 496 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது என்றார்.
இதேபோல் 100 யூனிட் மின்சாரம் கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கப்பட்டு வருவதால், அதை சிலர் வேண்டாம் என நினைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் கணக்கீட்டாளர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: rahul: modi:நண்பர்கள் சொல்லாததைக் கூட கேட்கும் பிரதமர் மோடி, மக்களின் பேச்சைக் கேட்பாரா: ராகுல் காந்தி விளாசல்
மேலும் பேசிய அவர், மாநிலம் முழுவதும் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி 1200 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது என்றார், அப்பணிகள் பருவமழை தொடங்குவதற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அதன் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
மேலும் வீடுகளில் மின் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்கள் விரைவில் பொருத்தப்படும் என்றும், அதற்கான கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். விரைவில் வீடுகள் தோறும் சுமார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.