நாளைக்கே தேர்தல் வைக்கட்டும்.!திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலை விட்டே விலகுகிறோம்.?செல்லூர்ராஜூ தடாலடி

By Ajmal Khan  |  First Published Jul 20, 2022, 4:00 PM IST

நாளைக்கே தமிழகத்தில் தேர்தல் நடக்கட்டும், திமுக ஆட்சிக்கு வந்தால் அரசியலை விட்டு விலகுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்


பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய திமுக

மதுரை பழங்காநத்தத்தில்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், அதிமுகவினர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மின் கட்டண உயர்வால் திமுக அரசு தமிழக மக்களை கசக்கி பிழிகிறது என்று தான் சொல்ல வேண்டும். திமுக அரசு சொன்னதை எதையுமே நிறைவேற்றவில்லை. ஒன்று,இரண்டை நிறைவேற்றி விட்டதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள்.முழு பூசணிக்காயை குண்டா சட்டிக்குள் மறைக்க பார்க்கின்றனர் என கூறினார். பொய் சொல்லி மக்களை ஏமாற்றி உள்ளனர். நாங்கள் குறை சொன்னால் எதிர்க்கட்சி காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார்கள் என கூறுகின்றனர். மக்களே சொல்கின்றனர் திமுக எதுவும் செய்யவில்லையென்று என தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

GSTகூட்டத்தில் தமிழக அமைச்சர்.!வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் வாயில்லாப் பூச்சியாக இருந்தது ஏன்?இபிஎஸ்

மக்கள் பயத்தில் உள்ளனர்

வீட்டுவரி உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் கொதித்து போய் உள்ளதாக தெரிவித்தவர், திமுக அரசு எதையுமே செய்யாமல் வாகளித்த மக்களை வாட்டி வதைத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.  வாக்களித்த மக்களுக்கு  இந்த ஆட்சி பிடிக்கவில்லை வேறு ஆட்சியை மாற்றிக்கொள்ளலாம் என  சட்டம் இருந்தால் திமுக அரசு மாற்றப்பட்டிருக்கும் என கூறினார். திமுக ஆட்சியில் ஒரு கொடுமை சென்றால் இன்னொரு கொடுமை நடப்பதாக தெரிவித்தார்.  கொரானா போனால் குரங்கம்மை வருகிறது. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் பயத்தில் உள்ளனர். பயத்தில் உள்ள மக்களுக்கு பூஸ்ட்டாக ஏதாவது கொடுக்க வேண்டும். ஆனால் துன்பத்தையும், துயரத்தையும் மட்டுமே கொடுக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது என தெரிவித்தார். 

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்...! நீதிமன்ற உத்தரவால் ஓபிஎஸ் ஷாக்

அரசியலை விட்டு விலகுகிறேன்

மின்சார வெட்டு இருக்கும் போது மின்சார கட்டண உயர்வு வேறா. என கேள்வி எழுப்பியவர், ஒன்றிய அரசு,ஒன்றிய அரசு என எப்போதும் மத்திய அரசை குறைசொல்லிய திமுக எங்களை அடிமை அரசு எனக்கூறி தற்போது திமுக அடிமை அரசாக உள்ளதாக தெரிவித்தார். கேட்டால் திராவிட மாடல் அரசு எனச்சொல்லுவது கேலிக்கூத்தாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இனி அதிமுக ஆட்சிக்கு வர முடியாது என தமிழக அமைச்சர்கள் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, தேர்தல் ஆணையத்திடம்  திமுக அமைச்சர்கள்  ஸ்பெஷல் ஆக கூறி மீண்டும் தேர்தல் நடத்துங்கள். தமிழகத்தில்  நாளைக்கே தேர்தல் வைக்கச்சொல்லுங்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அரசியலை விட்டே விலகுகிறோம் என தெரிவித்தார். அதிமுகவில் பல்வேறு காலகட்டங்களில் பிரிந்து சென்ற தலைவர்கள் திரும்பி வருவது உண்டு.  ஆர்.எம்.வீரப்பன் தொடங்கி கண்ணப்பன் வரை கட்சியை விட்டு சென்றுவிட்டு திருப்பி வந்துள்ளனர். அவர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா என தெரிவித்தார். எனவே பிரிந்து சென்றவர்கள் கட்சிக்கு திரும்பி வரனும் என கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன்... இபிஎஸ் கடிதத்திற்கு ஓகே சொன்ன வங்கிகள்!!

 

click me!