
அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆவடி மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் அதிமுகவை சேர்ந்த மனோகரன். இவர் கடந்த மே 15 ஆம் தேதி குருவி மேடு என்னும் பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் தனது காரில் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென எதிரில் வந்த லாரி திட்டமிட்டு கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவி.. ஓபிஎஸ் இடத்தில் ஆர்.பி. உதயகுமார்.. எடப்பாடி பழனிச்சாமியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
இதை அடுத்து அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை அவரது மனைவி பிள்ளைகள் கண்ணெதிரே கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் காவல்துறையினர், இது தொடர்பாக சுந்தர பாண்டியன், பத்மநாபன், அரவிந்த் குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: நாளைக்கே தேர்தல் வைக்கட்டும்.!திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலை விட்டே விலகுகிறோம்.?செல்லூர்ராஜூ தடாலடி
அதில், வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பல் கழிவுகளை லாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வந்ததில் ஏற்பட்ட தொழில் போட்டியால் உருவான முன் விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் 10 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் தொடர்ந்து சிறையில் அடைக்க ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.