
தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது தமிழக அரசு.
இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டு உள்ளார். அதன்படி, 7 மாவட்ட ஆட்சியர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சிவகங்கை லதா, சென்னை அன்புசெல்வன், கடலூர் தண்டபாணி, ஈரோடு பிரபாகர், ராம்நாடு நடராஜன், கிருஷ்ணகிரி கதிரவன் , மதுரை வீரராகவராவ் உள்ளிட்ட 7 ஆட்சியர்கள் இடம் மாற்றம் செய்து அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது தமிழக அரசு.
பள்ளி கல்வி துறை செயலாளர் உதயசந்திரன் தொல்லியல் துறை ஆணையராக பணி மாற்றம். அதன்படி, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் பணியிட மாற்றம் செய்யப் பட்டு உள்ளார். பள்ளிகல்வித்துறை செயலர் உதய சந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி ஆச்சு மற்றும் எழுது பொருள் துறைக்கு மாற்றம்.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம். சென்னை மாவட்ட ஆட்சியராக சண்முக சுந்தரம் நியமனம் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.