18 MLA-க்கள் வழக்கில் அடுத்தது என்ன? கூடியது அதிமுக செயற்குழு!

Published : Aug 23, 2018, 05:36 PM ISTUpdated : Sep 09, 2018, 07:46 PM IST
18 MLA-க்கள் வழக்கில் அடுத்தது என்ன? கூடியது அதிமுக செயற்குழு!

சுருக்கம்

சென்னை ராயப்பேட்டையில் கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் உறுப்பினர் சேர்க்கை பற்றி விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது? குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி, மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதில் அக்கட்சி உறுதியாக இருந்து வருகிறது. 

எனவே இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் முக்கியமாக 18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தகுதி நீக்க வழக்கு நமக்கு எதிராக வந்தால் சமாளிப்பது எப்படி, அதேவேளையில் சாதகமாக வந்தால் சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!